செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 5
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 5  வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


1. 'கந்தன் கருணை' எந்தப் பண்டிகை தினத்தன்று வெளியானது?

2. இதயக்கமலம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?

3.  சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, முத்துராமன், தேவிகா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், மனோரமா, விகே ராமசாமி, ஜெயலலிதா ஆகிய அனைவரும் நடித்த திரைப்படம் எது? இயக்கியவர் யார்?

4. ஜெயகாந்தன் எழுதிய 'கை விலங்கு' நாவல் எந்தப் படமாக உருபெற்றது? என்று வெளியானது? தயாரிப்பாளர் யார்?

5. ம.கோ.ரா.(MGR)-வுடன் முதன் முதலாக நடிப்பதற்காக சிவகுமாரை எந்தப் படத்திற்காக அணுகினார்கள்? முதன் முதலாக சேர்ந்து நடித்த படம் எது?

6. விட்டலாச்சாரியாவின் புதல்வரின் பெயர் என்ன? அவரும் ஓர் இயக்குனர்.

7. 'தேனும் பாலும்', 'இரு மலர்கள்' படத்துக்கு வசனம் எழுதியவர் யார்?

8. 'செங்கோட்டை சிங்கம்' படத்தைத் தயாரித்தவர் யார்?

9. 'நான்', 'மூன்றெழுத்து' படங்களைத் தயாரித்தவர் யார்?

10. ஏ.வி.எம். ராஜன் என்ன படித்திருக்கிறார்? நடிப்பதற்கு முன் எங்கு வேலை பார்த்தார்?


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. 'ஒரு போர்க்களமும், இரண்டு பூக்களும்' நாவலை எழுதியவர் யார் ?  (வைரமுத்து)

2. 'அன்று வேறு கிழமை' நூலின் ஆசிரியர் யார் ? (ஞானக்கூத்தன்)

3. 'நிரந்தர மனிதர்கள்' கவிதை நூலை எழுதியவர் யார் ? (அறிவுமதி)

4. 'ஒளிப்பறவை' நூலின் ஆசிரியர் யார் ? (சிற்பி)

5. 'பஞ்சாரம்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்? (யுகபாரதி)

6. 'காமஞ்சரி' என்ற நூலை இயற்றியவர் யார் ? (புலவர் குழந்தை)

7. 'ஏர் எழுபது' நூலை இயற்றியவர் யார் ? (திருவள்ளுவர்)

8. 'உடைந்த நிலாக்கள்' யாருடைய கவிதைத்தொகுப்பு ? (பா. விஜய்)

9. 'இராவண காவியம்' எழுதியவர் யார் ? (புலவர். குழந்தை)

10. மூவருலா எழுதியவர் யார் ? (ஒட்டக்கூத்தர்)

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி :  சந்தோஷ் குரு  santhoshguru@gmail.com

வாழ்த்துக்கள் சந்தோஷ் :) !!


 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |