செப்டம்பர் 23 2004
தராசு
கார்ட்டூன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
திரைவிமர்சனம்
க. கண்டுக்கொண்டேன்
சமையல்
நையாண்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : மசாலா பொங்கல்
    - மீனா
    | Printable version |

    மசாலா பொங்கல்

    தேவையானவை

    அரிசி - 1 கிலோ
    மைசூர் பருப்பு - 150 கிராம்
    பாசிப்பருப்பு - 150 கிராம்
    வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பட்டை, லவங்கம், கிராம்பு - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 6
    புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
    நெய் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும். நெய்யில் பட்டை, லவங்கம், கிராம்பு ஆகியவற்றை லேசாக வறுக்கவும்.  பிறகு அரைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். ஒரு கொதி வந்த பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதற்கிடையே கொஞ்சம் நெய் விட்டு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். கொதிக்கும் வெங்காய மசாலா கலவையில் ஒரு அரிசிக்கு இரண்டு தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பு மற்றும் மைசூர் பருப்பை போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டவும். சுவையான மசாலாப் பொங்கல் ரெடி! புதினா சட்னியோடு சேர்த்து சுவைக்க சூப்பர் டேஸ்டாக இருக்கும்!!



    பன்னீர் டிக்கா 

    தேவையானவை

    பன்னீர் க்யூப்ஸ் - 100 கிராம்
    புளித்த தயிர் - 2 கப்
    மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 10 பல்
    எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இஞ்சி, பூண்டை அரைத்து புளித்த தயிரை அத்துடன் சேர்க்கவும். பிறகு மஞ்சள் பொடி மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

    பன்னீர் க்யூப்ஸை அந்தக் கலவையில் போட்டு ஊற வைக்கவும். நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறிய பிறகு, இளம் சூடான தோசைக்கல்லில் வைத்து கொஞ்சமாக எண்ணெய் தடவி மிதமாக ரோஸ்ட் செய்யவும்.

    ஒரு கம்பியில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி பன்னீர் துண்டுகளை வரிசையாக குத்தி நேரடியாக அனலில் காட்டி பொன் நிறமாக வரும்வரை வாட்டுங்கள். தேவைப்பட்டால் சாப்பிடுவதற்கு முன்பாக சிறிது எலுமிச்சம்பழத்தைப் பன்னீர் துண்டங்களின் மீது பிழிந்து கொள்ளலாம். அருமையான மாலை நேரச் சிற்றுண்டி இந்தப் பன்னீர் டிக்கா!!

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |