செப்டம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
க. கண்டுகொண்டேன்
கட்டுரை
உங்க. சில புதிர்கள்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : காந்தியின் கனவு
    - மீனா
    | Printable version |

    ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நம் மத்திய மாநில அரசுகள் செய்யும் ஒரே வேலை - அதிகாரப்பூர்வமாக மதுக்கடைகளை மூடுவதுதான். மற்றபடி காந்தியின் கனவுகளான ஜாதியை ஒழித்தல், தீண்டாமைக் கொடுமையை நாட்டிலிருந்து விரட்டுதல், ராம ராஜ்ஜியம் காணுதல், பெண் விடுதலை போன்ற பல விஷயங்களை எல்லாத் தலைவர்களும் முற்றிலும் மறந்துவிடுவார்கள்.

    இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு வேலை வாய்ப்பு நிறுவனங்களிலும் கேட்கப்படும் முக்கிய கேள்வி - ஜாதி என்ன? ஜாதிக்கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று எண்ணிய ஒரு தலைவரை தேசப்பிதாவாகக் கொண்ட நாட்டில் கேட்கப்படும் ஒரு மிக முக்கியமான கேள்வி இதுதான். ஜாதியை மையமாக வைத்து நாட்டில் நடக்கும் கலவரங்களின் எண்ணிக்கை எண்ணி மாளாது.

    நாடு முழுவதிலும் நடைபெற்ற ஒருநாள் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. லஞ்சம் எந்த அளவிற்குத் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது. எந்த இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்தி உண்ணாவிரதம் இருந்து பலதரப்பட்ட சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரோ குஜராத்திலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற இந்து முஸ்லீம் கலவரம் உலகையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஆக்கியது. ராம ராஜ்ஜியம் காண நினைத்தவரது நாட்டில் கிட்டத்தட்ட ரோம ராஜ்ஜியம் ஏற்பட்டுள்ளது. நாட்டிற்காக அனைத்துத் தியாகங்களையும் செய்தாலும் எந்த ஒரு பதவியும் தனக்கு வேண்டாம் என்று நினைத்த அந்த மகான் வாழ்ந்த நாட்டில் செய்யாத வேலைக்குக் கூட பெயரையும் பதவியையும் தட்டிச்செல்ல விரும்பும் தலைவர்கள் தான் தற்போது நிறைந்து இருக்கிறார்கள். சின்னக் குழந்தையைக் கதறக் கதறக் கற்பழித்துக் கொலைசெய்த காமக் கொடுரனுக்குத் தயங்கித் தயங்கி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிக்கிறது நமது நீதிமன்றங்கள்.

    தென்னாப்பிரிக்காவின் சிறந்த 10 தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டு - அமெரிக்காவில் சிலை திறக்கும் அளவிற்கு சர்வதேசப் புகழ் பெற்ற மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் மரியாதை - வெறும் மதுக்கடைகளை ஒரு நாளைக்கு அடைப்பதோ, காந்தி படத்தை ஒளிபரப்புவதோ, அவரது நினைவு நாளின் போது 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதோ மட்டுமல்ல. அவர் கண்ட கனவுகளில் சிலவற்றையாவது நிறைவேற்ற முயற்சி செய்வதுதான். அனைத்துக் கட்சித் தலைவர்களும் மக்களும் இணைந்து முயற்சி செய்தால்தான் இது நடக்கும். நாட்டிற்காக அனைத்தையும் அர்பணித்து போராடிய அந்தத் தலைவருக்காக இதைச் செய்ய நாம் செய்வோமா?

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |