அக்டோபர் 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திருத்தலங்கள் : திருப்பதி
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Thirupathiகலியுகத்தில் கண் கண்ட தெய்வமாகத் துதிக்கப்படும் மூலவர் வேங்கடேசப் பெருமாள் உயர்ந்த தாமரையிலான பீடம் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஏழுமலைகள் ஏறிச் சென்றால் ஏழு ஜென்ம வினைகள் எளிதில் நீங்கும் என்பதற்காகவே அவர் ஏழு மலைகளுக்கு அப்பால் எழுந்தருளியுள்ளதாகப் பெரியோர் கூறுவர்.

இப்பெருமானுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களுள் "மேரு பச்சை" எனப்படும் பச்சைக்கல் அணி ஒளிவிடும் மணிகளாலான தங்கத்திருமுடி, முதலை வடிவுள்ள மகர குண்டலங்கள், சங்கு சக்கரங்களைக் குறிக்கும் தங்கக் கவசங்கள், புலி நகங்களுடன் கூடிய கழுத்து மாலை, மகரக்கண்டி, நாகாபரணங்கள், திருமகளின் 108 உருவங்களுடன் கூடிய கழுத்தணி, துளசிமாலை, வெங்கடேஸ்வர சகஸ்ரநாமம் பொறிக்கப்படுள்ள மாலை, பத்மாவதி, திருமகள் ஆகியோரின் உருவங்களுடன் கூடிய மார்புப் பதக்கம் ஆகியவை சிறப்பானவை.

நுழைவாயிலிலுள்ள இராஜகோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது, இரண்டாம் கோபுரத்தின் முன்னர் திரு. வேங்கடவன் ஹதிராமர் என்ற தீவிர பக்தருடன் சொக்கட்டான் ஆடும் காட்சியும்,, இராமர் அரச சபையை நடத்தும் காட்சியும் சிற்பங்களாக அமைக்கப்பட்டன. இக் கோபுரம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கருவறையை அலங்கரிக்கும் விமானம் ஆனந்த விமான நிலையம் எனப்படும், அனைவரும் சேவை சாதிக்கும் பொருட்டுக் கருவறையின் மீது அமைந்துள்ளது வைகுண்டத்திலிருந்து வந்த திவ்விய விமானத்தில் ஏழுமலையான் காட்சியளித்தாக வராக புராணம், பவிஷ்யோத்தர புராணம் குறிப்பிடுகின்றன.

இக் கோயிலில் காலையில் சுப்ரபாதத்துடன் வழிபாடுகள் துவங்குகின்றன. கடந்த நாள் அலங்காரங்களைக் களைந்து மலர்களால் அலங்காரம் செய்து பக்தர்களுக்குத் தரிசனம் அளிப்பார். இதுவே தோமால சேவையாகும். முந்தையநாளின் வரவு, செலவு கணக்குகளும், பஞ்சாகமும் கொலுவு ஸ்ரீநிவாசன் முன் படிக்கப்படும். இதனத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

வியாழக்கிழமைகளில் பூலங்கி சேவையின்போது மூலவர் மேலுள்ள ஆபரணங்கள் விலக்கப்படும். வெள்ளிக்கிழமையுன்றும் ஆடை ஆபரணங்களை எடுத்து விட்டு அபிஷேகம் நடத்துவர். குறிப்பிட்ட காலத்தில் 1000 மட்கலங்களில் நீர் நிரப்பி நடத்தும் சகஸ்கட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு ஆண்டு முழுவதும் பற்பல விழாக்கள் இடையறாது கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி மாதம் சுக்ல பட்ச ஆரம்ப நாளன்று துவங்கி அடுத்த ஒன்பது நாட்களுக்குப் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். சுமார் 175 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து திருப்பதிக்குக் குடைகளைச் சமர்ப்பனம் செய்யும் பழக்கம் நடைபெற்று வருகிறது.

| | |
oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |