அட்டோபர் 06 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
அடடே !!
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : இயற்கை சீற்றங்களும் நிவாரணப் பணிகளும்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

 

உலகம் முழுவதும் இக்காலத்தில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதும், அவர்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து உதவித் தொகைகள் குவிவதும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் கோடிக்கணக்கில் குவியும் இத்தகைய உதவித் தொகைகள் உரியவர்களுக்கு உரிய உதவித் தொகைகள் போய் சேருகிறதா என்றால் இல்லை என்று தான் பலதரப்பிலிருந்தும் பதில் வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகள் போய் சேராததால் அரசாங்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தாலும் தங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளவும் மக்கள் போர்வையில் உள்ள சமூக விரோதிகள் கொள்ளையடித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட நியூஆர்லியன்ஸ் மக்கள் இத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டதையும் இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி சமூக விரோதிகள் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதையும், சமீபத்தில் பாக்கிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட முசாபராபாத் நகர மக்கள் கடைகளிலிருந்தும், ராணுவ வாகனங்களை நிறுத்தியும் கொள்ளையடித்து வருவதையும் நாம் செய்திகளில் பார்த்துக்கொண்டும் படித்துக் கொண்டும் தான் இருக்கிறோம்.

எவ்வளவோ முன்னேறிய நாடுகளானாலும், முன்னேறி வரும் நாடானாலும் இத்தகைய மீட்டுப் பணிகளில் காட்டும் மெத்தனத்தால் தான் இத்தகைய அவல நிலை ஏற்படுகிறது. இப்படி இருக்க அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விரோதங்களால் பாதிக்கப்பட்ட தங்கள் மக்களுக்கு உதவி செய்ய முன்வரும் நாடுகளிலிருந்து வரும் நிதியுதவிகளையும், மனித உதவிகளையும் நிராகரிப்பது சரியாகுமா?

உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய சூழ்நிலையில் தங்களுக்குள் இருக்கும் மனமாச்சரியங்களை விட்டொழித்து நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்ய அண்டை அயல் நாடுகள் முன்வருமாயின் அவர்கள் உதவியைப் பெற தயங்காது முன்வரவேண்டும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |