அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : கேலிக்கூத்தான உள்ளாட்சித் தேர்தல்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | | Printable version | URL |

நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் முடிவுகள் எப்படி வருமோ தெரியாது. ஆனால் இப்போது நடந்துள்ள அராஜகத்தைப் போல தமிழகத்தில் எப்போதுமே நடந்ததில்லை என்று நடுநிலையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஆளும்கட்சி - எதிர்கட்சி இரண்டும் வெறியாட்டம் ஆடியுள்ளது அப்பட்டமாக பொது மக்களுக்குத் தெரியவந்துள்ளது. திரைப்படங்களில் வரும் காட்சியைப் போலவே கட்சி சார்ந்த பிரமுகர்கள் ஓட்டுச்சாவடியைக் கைப்பற்றி கணக்கு வழக்கில்லாமல் கள்ள ஓட்டு போட்டதும் வரலாறு காணாத வன்முறை வெடித்ததும், உயர்நீதிமன்றம் தலையிட்டு சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையை நிறுத்திவைக்குமாறு கூறியதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பம்சங்கள்.

இதையெல்லாம் விட உச்சகட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தின் போது "எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்வோம்.. இல்லையென்றால் அவ்வளவுதான்.." என்ற ரீதியில் பேசியதை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையமும் ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விட்டதா.. தெரியாது..

இலவச டி.வி, கேஸ் ஸ்டவ், இரண்டு ரூபாய் அரிசி போன்ற ஏகப்பட்ட நல உதவிகளை நாங்கள் செய்துள்ளோம் என்று சொல்லி தனக்குத் தானே 100 மார்க் போட்டுக் கொள்ளும் ஆளும் கட்சியும், மக்களுக்காக ஆளும் கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்கட்சியும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களது வேட்பாளர்கள் மீதும் மக்களுக்கு தாங்கள் செய்த நலப்பணிகளின் மீதும் நம்பிக்கை இருந்தால் தைரியமாக நின்று தேர்தலை எதிர்கொண்டிருக்கலாமே - எதற்காக இந்த வன்முறை வெறியாட்டங்கள்?

கட்சி பேதம் பாராமல் இருவருமே அராஜக - வன்முறை செயல்களில் ஈடுபட்டதன் மூலமாக தங்கள் மீதும் தங்கள் கட்சியின் மீதும் மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள் என்று சொல்வது மிகப்பொருந்தும். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி எந்த அளவிற்கு நியாயமாக அமைந்திருக்கும் என்று தெரியவில்லை. மொத்தத்தில் அமைதிப் பூங்காவான தமிழகத்தை இன்னொரு பீகாராக மாற்றிவிட்டார்கள் நம் அரசியல்வாதிகள். 

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |