அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திருத்தலங்கள் : அலர்மேலு மங்கை திருச்சானூர்
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | | Printable version | URL |

Perumal - Thayarகீழ் திருப்பதியிலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ உள்ளது. அங்கு பத்மாவதி-ஸ்ரீனிவாசன் திருக்கோயில்கள் உள்ளன. மகாலக்‍ஷ்மி உடன் இல்லாமையால் பொருட்செல்வம் இல்லாத சூழ்நிலையில் திருமணச் செலவிற்காகத் திருவேங்கடவன் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லக்‍ஷம் தங்க நாணயங்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டார். கலியுகம் முடியும் வரை இக்கடனுக்கு வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார்.


லக்‍ஷ்மி தேவிதான் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த்திருப்பதியில் எழுந்தருளுமாறு வரம் பெற்றார். லக்‍ஷ்மியைத் தரிசிப்போர்களுக்குச் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்குமாறு திருவேங்கடவன் ஆக்ஞை பிறப்பித்தார்.

அவ்வாறு பெறும் செல்வத்தின் ஒரு பகுதியைத் திருவேங்கடவனுக்குக் காணிக்கையாக இந்த அன்பர்கள் செலுத்துவர். அவற்றைக் கொண்டு குபேரனுக்கு அளிக்க வேண்டிய வட்டியை அடைத்துவிடலாம், இதுவே திருவேங்கடவனின் எண்ணம்.


வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பு கோவிந்தராஜப் பெருமாளிடம் விடப்பட்டது. அலர்மேலு மங்கை சகல சீதங்களுடன் திருவேங்கடவனையடைந்த போது கருவேப்பிலை கொண்டு வரவில்லையாம். ஏழுமலைகளிலும் எங்கு தேடியும் அது கிடைக்காததால் திருப்பதியின் தென் புறத்திலே திருச்சானூர் என்னும் இடத்தில் அவர் குடி கொண்டுவிட்டதாகக் கர்ண பரம்பரை வரலாறு உண்டு. திருவேங்கடவரை தரிசிப்போர் திருச்சானூரிலுள்ள அலர்மேலு மங்கையையும் சென்று தரிசிப்பர்.

அலர்மேலு மங்கை, திருவேங்கடவனை, தாயார்-பெருமாள் என பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

பிகு : அலர்மேலு மங்கை காலப்போக்கில் அலமேலு மங்கை என்று வழக்கில் வந்தது.

| | | | |
oooOooo
                         
 
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |