அக்டோபர் 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : கண்ணியம் காப்பார்களா ?
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | | Printable version | URL |

அரசியல்வாதிகள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் முதல் நாள் சேற்றை வாரி வீசுவதும், மறுநாளே அவர்கள் கூடிக் குலவி கொஞ்சுவதும் சகஜமான ஒரு நிகழ்வுதான் என்றாலும் சமீப காலங்களில் அரசியல்வாதிகள் ரொம்பவுமே தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் விமர்சிப்பதைப் பார்த்தால் நாகரீகம் - கண்ணியம் போன்றவற்றை அவர்கள் முழுவதுமாக மறந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிலும் அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா கருணாநிதியைப் பற்றியும் அவரது குடும்பத்தினர்களைப் பற்றி செய்யும் விமர்சனங்களும், இதற்கு பதிலடி தருகிறேன் என்று ஜெயலலிதாவைப் பற்றி கருணாநிதி செய்யும் விமர்சனங்களும் அநாகரீகமாக இருக்கின்றன. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தைப் பற்றிய ஜெயலலிதாவின் விமர்சனம்.

கட்சி ஆரம்பித்து 1 ஆண்டு தான் ஆகிறது என்றாலும் உள்ளாட்சித் தேர்தலிலும், நாடளுமன்ற இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று அரசியல் விற்பன்னர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது தே.மு.தி.க. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக விஜயகாந்த் தொடங்கியுள்ள கட்சி குறுகிய காலத்திலேயே மக்கள் ஆதரவை ஓரளவிற்கு பெற்றுள்ளது. இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் அந்தக் கட்சியின் தலைவர் மீது - அவர் நடத்தையின் மீது இவ்வாறான கருத்துகளைப் பொத்தாம் பொதுவாகக் கூறுவது மிகவும் தவறு.

உண்மையிலேயே அவரது நடத்தையில் - செய்கையில் தவறு இருந்தால் அதை ஆதாரத்துடன் சற்று கண்ணியமாகச் சுட்டிக் காட்டலாம் - அதுவும் மக்கள் சம்மந்தப்பட்டது என்றால். தனிமனிதத் தாக்குதல்கள் தேவையற்றவை. என்னதான் கொள்கை அளவில் அடித்துக்கொண்டாலும் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து தனிமனித மாண்பை வட இந்திய அரசியல் தலைவர்கள் நன்கு காத்துவருகிறார்கள். அந்தப் பண்பு நமக்கு எப்போதுதான் வருமோ தெரியவில்லை.

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |