அக்டோபர் 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திருத்தலங்கள் : வடபத்திர சாயி அரங்கநாதர் - திருவில்லிபுத்தூர்
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | | Printable version | URL |

திருவில்லிபுத்தூர் என்ற இத்தலம் விருதுநகர் - தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மதுரையில் இருந்து ராஜபாளையம் பொகும் சாலையில் சென்றால் இவ்வூரை அடையலாம். பேருந்து, புகைவண்டி வசதி உண்டு.

Aranganatharஆண்டாள் அவதரித்த திருத்தலம். இத்தலத்தில் ஆண்டாள் திருக்கோயிலுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோவில் வாசலில் முதலில் இருப்பது பந்தல் மண்டபம். அதை அடுத்து இடைநிலைக் கோபுரம். இங்கே இராமனுகும், ஸ்ரீநிவாசனுக்கும் வேறு வேறு சந்நிதிகள் உள்ளன. ஆண்டாள் கோவில் விமானம் தங்கத் தகடு வேயப்பெற்றது. இதில் அமைக்கப்பட்ட திருவுருவங்கள் ஆண்டாளின் பாடல்களை சொல்லக்கூடியவை.

அர்த்த மண்டபத்துக்கு அடுத்து கர்ப்பக் கிரகமாகும். இதில் ரங்கமன்னார், வலப்பக்கம் ஆண்டாள், இடப்பக்கம் கருடாழ்வார் ஆகிய மூவரும் சேவை சாதிக்கிறார்கள். திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாகக் கையில் செங்கோல் ஏந்தி நிற்கும் காட்சி, இங்கு நடக்கும் விழாக்களில் ஆடிப்பூர உற்சவம்தான் விசேஷமானது. அதில் தேரோட்டம் நடைபெறும். பங்குனித் திங்களில் ஆண்டாளின் திருக்கலியாண உற்சவம் நடைபெறும்.

இத்தலத்திற்கு இராமானுஜர் எழுந்தருளியிருக்கிறார். இக்கோயில் திருப்பணியில் திருமலை நாயக்கரும் பங்கு எடுத்துள்ளார்.

|
oooOooo
                         
 
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |