சுவாசம் தேடிப் போகையிலே காற்று கடன் கேட்டது வாசம் தேடிப் போகையிலே பூவும் பொருள் கேட்டது
நேசம் தேடிப் போகையிலே உறவு உயிர் கேட்டது வசந்தம் தேடிப் போகையிலே கானல் வழி கேட்டது
காதல் தேடிப் போகையிலே கனவு விடை கேட்டது கவிதை தேடிப் போகையிலே சொற்கள் ஓய்வு கேட்டது
சித்திரம் தேடிப் போகையிலே தூரிகை சேலை கேட்டது நித்திரை தேடிப் போகையிலே பஞ்சணை விலை கேட்டது
கேட்டது எதுவும் கொடுக்காமல் கேட்காமல் தந்தான் சிரிப்பு சிரிப்பாய் சிரிக்கின்றேன் இன்று என்னைச் செய்தவனைப் பார்த்து
|