பனீர் ·ப்ரை
தேவையானவை
பனீர் 200 கிராம் கடலை மாவு அரை கப் கொத்தமல்லித்தழை சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொறிக்க
அரைக்க
இஞ்சி 1 துண்டு பூண்டு 6 பல் மிளகாய் பொடி 2 டீஸ்பூன் தனியா பொடி 1 டீஸ்பூன் சோம்பு, சீரகம் 1 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் சின்ன வெங் காயம் 4 பட்டை, லவங்கம், ஏலக்காய் 1 மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து உப்பு சேர்த்து வையுங்கள். பனீரை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி அரைத்த மசாலா கலவையில் பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கடலை மாவு சேர்த்து (தண்ணீர் சேர்க்க கூடாது) நன்கு பிசறி சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே பஞ்சு போல மெத்மெத்தென்றும் இருக்கும் இது தக்காளி சாஸ¤டன் சாப்பிட சூப்பராக இருக்கும். வாண்டுகளும் பெரியவர்களும் இந்தப் பன்னீர் ·ப்ரைக்கு போட்டிபோடுவார்கள்.
புளிப்பு கார தோசை
தேவையானவை
பச்சரிசி 1 கப் உளுந்து 1/2 கப் தேங்காய் துறுவல் அரைகப் மிளகாய் வத்தல் 6 புளிபேஸ்ட் 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப
செய்முறை
அரிசி மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசி - உளுந்துடன் தேங்காய், மிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக ஊற்றவும். புளிப்பு உறைப்பு தோசைக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் புதினா சட்னியுடன் சுவைக்கலாம். மெல்லிய தோசைகளுக்குப் பதிலாக ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு ஊத்தப்பமாகவும் செய்யலாம்.
|