அட்டோபர் 27 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஜன்னல் பார்வைகள்
துணுக்கு
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கவிதை
கட்டுரை
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜன்னல் பார்வைகள் : ஒன்றல்ல மூன்று
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| Printable version | URL |

மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் மக்களுக்கு உழைக்கின்றார்களோ இல்லையோ அவர்கள் சுகமாக இருக்கின்றனர். அதற்கு சிறு உதாரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கின்ற சலுகைகளை கேட்டாலே வாய் பிளக்கத் தோன்றும். ஒரு எம்.பிக்கு மாதச்சம்பளம் 12,000 வழங்கப்படுகிறது. இது தவிர தொகுதிக்கான படியாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றால் ஒரு எம்.பிக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 அலவன்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மூன்று முறை நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும். எம்.பி. ஒருவர் டெல்லியில் தங்க வாடகைக் கட்டணம் இல்லாமல் தங்கிக் கொள்ள ஒரு சொகுசுப் பங்களா இலவசமாக தரப்படும்.இதில் 50,000 யூனிட் வரை மின்கட்டணம் கட்ட வேண்டியதில்லை. மேலும் 3 தொலை பேசி வழங்கப்படும். இதில் 1,70,000 லோக்கள் கால்கள் இலவசமாக வழங்கப்படும். நாட்டில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் ரெயிலில் குளிர்சாதன வசதி உள்ள வகுப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். அதே போல் வருடத்தில் 40 முறை பிசினஸ் வகுப்பில் விமானத்தில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். உடன் தனது மனைவி அல்லது உதவியாளரை அழைத்துச் செல்லலாம். இது தவிர தொகுதிகளை சுற்றிப்பார்க்க கிலோ மீட்டருக்கு ரூபாய் 8 பயணச் செலவாக வழங்கப்படுகிறது. இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு 32 லட்சம் வரை ஒரு எம்.பிக்கு கிடைக்கும். இது தவிர கட்டப் பஞ்சாயத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவிடப்படும் தொகையில் இருந்து கமிஷன் என்று எம்.பிக்.களின் கைகளில் பண மழை தான். தேர்தலில் ஏன் அதிகமாக செலவு செய்கின்றனர் என்று இப்பொழுது தெரிகிறதா ?


பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கும் பங்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதன் விளைவு ஆண் மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் பொழுது பெண் பிள்ளைகளுக்கும் சொத்தை பிரித்துக் கொடுக்கும் முறை நாட்டில் அறிமுகமாகியது. ஆனால் மனித உரிமை ஆணைய உறுப்பினர் சம்பந்தம் சமீபத்தில் பேசிய பேச்சு மகளிரை கோபம் அடைய வைக்கும். அவரின் அந்தப் பேச்சின் சுருக்கம் இது தான்:

பெற்றோரின் சொத்தில் பெண்கள் உரிமை கொண்டாடுவதைப் போல் பெற்றோரின் கடன்களிலும் பங்கு பெற வேண்டிய பொறுப்பு உண்டு என்று சம்பந்தம் பேசி இருக்கிறார். இவரின் பேச்சினைக் கேட்டு பெண்கள் வருத்தப் படுகிறார்களோ இல்லையோ, மருமகன்கள் இப்பொழுதே உஷாராக இருப்பது நல்லது என்று கடன்கார மாமனாரைப் பெற்றுள்ள ஒரு மருமகன் புலம்பிக் கொண்டு இருந்தார்.


Girija Raghavanபெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற நிலை மாறி உலகின் பல பகுதியில் இருந்து பெண்களுக்கு உதவி பெறவும் உதவி செய்யவும், பெண்களை இணைக்கும் முயற்சியாக சு10ரியப் பெண்கள் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டுவருகிறது. லேடிஸ் ஸ்பெ~ல் பத்திரிக்கை ஆசிரியருமான கிரிஜா ராகவனும் சர்வதேச தமிழர் பத்திரிக்கையின் சிறப்பாசிரியரும், எழுத்தாளரான சவுதி அரேபியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி மாசிலாமணியும் இனைந்து இந்த சு10ரியப் பெண்கள் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து பெண் இனத்திற்கும், ஷாப்பிங் முதல் சமூக சேவை வரை அனைத்து துறைகளிலும் உதவுவதே தங்களின் அமைப்பின் நோக்கம் என்று இவர்கள் அறிவித்துள்ளனர். அதிலும் சுய தொழில் தொடங்க உள்ள பெண்களுக்கு உதவ ஆர்வமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அமைப்பில் சேருவதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளனர்.  இது பற்றிய மேலும் விபரங்களுக்கு www.ladiesspecial.com  என்ற இனையதளத்திலும், சர்வதேச தமிழ் பத்திரிக்கை ஆகியவற்றில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த அமைப்பில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு girijaraghavan@ladiesspecial.com மற்றும் viji_masi@yahoo.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த அமைப்பினால் நல்லது நான்கு பேருக்கு நடந்தால் சரி.    

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |