அட்டோபர் 27 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஜன்னல் பார்வைகள்
துணுக்கு
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கவிதை
கட்டுரை
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : லேடர் 49
- ஆனந்த் சங்கரன் [anand_sankaran@yahoo.com]
| Printable version | URL |

Ladder 49தேச சேவை செய்யும் ராணுவவீரர்கள், போலீஸ்காரர்கள் போன்றவர்களைப் பற்றிய படங்கள் வெகு குறைந்த அளவில் தான் தமிழில் வருகின்றன. அதிலும் பெரும்பாலானவை கமர்ஷியல் படங்களே. இத்துறையில் உள்ளவர்களின் உண்மை மனநிலையை - அவர்கள் பணிகளைப் பற்றி - அவர்கள் செய்யும் தியாகங்களைப் பற்றி சொல்வதை விட அவர்களை வெறும் கமர்ஷியல் ஹீரோவாக்கி பார்பதிலேயே நம் இயக்குனர்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள். ஹிந்தி திரையுலகிலாவது ராணுவ வீரர்கள் பற்றிய படங்கள் ஓரளவிற்கு வருகின்றன. ஆனால் தமிழில் ?

மேலும் போலீஸ், ராணுவத்திற்கு இணையான தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களை திரைப்படத் துறையினர் யாரும் கண்டுகொள்வதே இல்லை. என்ன பாவம் செய்தார்களோ தீயணைப்புத் துறை வீரர்கள்!!

சென்ற ஆண்டு வெளியாகியிருந்த ஆங்கிலப் படமான லேடர் 49ல் (Ladder 49) தீயணைப்புத் துறை வீரர்களது வாழ்க்கை, பணியில் ஈடுபடும் போது அவர்கள் படும் பாடுகள், செய்யும் சேவைகள் போன்றவைகளை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். முக்கிய அம்சமாக ஒரு பெரிய கட்டிடத்தில் ஏற்படும் தீ விபத்தில் மாட்டிக்கொள்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் படத்தின் நாயகனே அந்தத் தீயில் மாட்டிக்கொள்கிறான். அவனைக் காப்பாற்ற அவனது தீயணைப்புத்துறை நண்பர்கள் போராடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவனை உயிருடன் மீட்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்து அவர்களே பின்வாங்குகிறார்கள். நாயகன் இறக்கிறான். மிக மிக யதார்த்தமாக இயக்கப்பட்டிருக்கும் படமான இது நிச்சயம் பார்ப்பவர்கள் மனதை பாதிக்கும்.

ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் மதிப்பு இருக்க அவர்களை - அவர்கள் செய்யும் சேவைகளை மையப்படுத்தி வரும் திரைப்படங்களும் ஒரு முக்கிய காரணம். ஆனால் தமிழ் திரைப்படங்களில் போலீஸ்காரர்களை ஜோக்கர்களாகவோ அல்லது வில்லன்களாகவோ அல்லது யதார்த்தமில்லாத சூப்பர் ஹீரோக்களாகவோ  சித்தரித்து வரும் படங்களே அதிகம்.

இனியாவது மக்களுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும், நாட்டிற்காக உழைக்கும் வீரர்களின் உண்மை நிலையை - அதாவது சினிமாத்தனமில்லாத படங்களைத் தயாரிக்க - இயக்க நம் தமிழ் திரையுலகினர் முன்வருவார்களா ?

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |