அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : யாருக்குப் பதவி?
    - மீனா
    | Printable version |

    மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவிக்கான அடிதடி கிட்டத்தட்ட 12 நாட்கள் கழித்து ஒரு வழியாக முடிந்த மாதிரி தோன்றினாலும் இன்னும் முதல்வர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முதல்வர் பதவி தங்கள் கட்சிக்கே வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த சோனியாவும், சரத்பவாரும் ஏகப்பட்ட சுற்று பேச்சுவார்த்தை நடத்தி எந்தக் கட்சிக்கு  முதல்வர்  பதவி என்பதைத் தீர்மானித்திருக்கிறார்கள். நீ முதல்வர் - நான் துணைமுதல்வர் என்ற ரீதியில் ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

    மராட்டியத்தில் மட்டுமன்றி பரவலாகவே நாடு முழுவதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகிக் கொண்டு வருகிறது. மக்கள் மாற்றங்களை விரும்புவதே இதற்கான முக்கியக் காரணம். வேறு வழியின்றி பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி ஆட்சிக்கு மூக்கால் அழுதுகொண்டே சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆட்சியும் அமைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு தங்கள் ஆட்சி நீடிக்கும் என்பதில் சம்மந்தப்பட்ட தலைவர்களுக்கே பலத்த சந்தேகம்.. காரணம் ஆதரவு தரும் கட்சி எந்த நேரம் காலைவாரிவிடுமோ என்ற அச்சம் தான். 

    மன்னராட்சி முறை மாறி - மக்களாட்சி வந்ததை ஏகப்பட்ட எதிர்ப்புகளுப்பிறகு மன்னர்கள் ஏற்றிக்கொண்டதைப் போல கூட்டணி ஆட்சி முறையையும் இன்றைய அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சகிப்புத் தன்மை மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசும் தலைவர்கள் - அடுத்த கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்துவது எப்படி என்பதைக் கற்றுத் தேற வேண்டும். ஒரு தேர்தல் முடிந்து முதல்வர் அல்லது பிரதமரைத் தேர்ந்தெடுத்த சில நாட்களிலேயே தங்களுடைய சொந்த விருப்பு - வெறுப்புகளை மனதில் கொண்டு ஆட்சியைக் கலைப்பதையும் அனாவசியத் தேர்தலை மக்களின் மீது திணிக்கும் வழக்கத்தையும் அரசியல் தலைவர்கள் என்று விட்டொழிப்பார்களோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் மலரும். அதுவரை நடக்கும் தேர்தல்கள் அனைத்தும் சும்மா கண்துடைப்பு தான்!!

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |