Tamiloviam
அக்டோபர் 29 09
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சமைத்து அசத்தலாம் : மாங்காய் ஊறுகாய் வகைகள்
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
  Printable version | URL |


 

மாங்காய்த் தொக்கு

Mangai Thokku

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-கால் கப்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயின் தோலகற்றித் துருவிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
3.அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து துருவிய மாங்காயை தாளிசத்துடன் சேர்த்து உப்பு,காரப்பொடி,காயம் சேர்க்கவும்.
4.தனியே ஒரு வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுத்து திரித்து வைத்துக் கொள்ளவும்.
5.மாங்காய் பச்சை வாடை போக வதக்கவும்.
6.திரித்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.
7.மாங்காய் நன்கு தொக்கி வரும் வேளையில் தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்து தொக்குடன் சேர்க்கவும்.
8.ஆற விட்டு பாட்டிலுக்கு மாற்றவும்.

கூடுதல் குறிப்புகள்

1.இவ்வகைத் தொக்கை கால் மணி நேரத்தில் செய்து விடலாம்.
2.தக்காளியை மிக்ஸியில் அரைத்தோ மிகவும் பொடியாக நறுக்கியோ இதே முறையில் தக்காளித்தொக்கும் செய்து கொள்ளலாம்.
3.பூண்டு சேர்க்க விரும்புபவர்கள் 2 பல்லு பூண்டை மிகவும் பொடியாக நறுக்கித் தனியே வதக்கி இதனுடன் சேர்த்து தொக்கு செய்யலாம்.
4.மிகவும் ருசியான இந்த ஊறுகாய் தயிர்சாதம்,பொங்கல் போன்ற உணவுகளுக்கு அருமையான இணை.


மாங்காய் பிசறல்(கோசாலி மாங்காய்)

mango pisiral

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-3 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-5 இலைகள்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயைத் தோலுடனேயே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் நல்லெண்ணெயைக் காய்ச்சி வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்திற்கு அந்த எண்ணெயை மாற்றி விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
3.மாங்காய்த் துண்டுகளுடன் மிளகாய்ப்பொடி(காரப்பொடி),உப்பு,காயம்,வறுத்த வெந்தயப்பொடி(1/4 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும்.
4.காய்ச்சிய எண்ணெயைச் சேர்த்து ஊற விடவும்.

கூடுதல் குறிப்புகள்

1.உப்பு,காரம் சரியாக இருக்கிறதா? என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டு அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்.
2.சில நிமிடங்களில் தயார் செய்ய முடிகிற இந்த ஊறுகாயை 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும், இல்லாவிடில் கெட்டு விடும்.
3.வெந்தயம் சேர்க்காமலும் செய்யலாம். வெந்தயம் சேர்ப்பவர்கள் கவனமாகவும் குறைந்த அளவிலும் போட வேண்டும், இல்லையென்றால் ஊறுகாய் கசந்து விடும்.
4.எண்ணெயில் ஊறும் போது தான் ஊறுகாய் மென்மையாகும்.
5.பொங்கல்,தயிர்சாதத்திற்குப் பொருத்தமான ஊறுகாய்.



மாங்காய் - காலிபிளவர் தொக்கு

 Mango Cauliflower Thokku

பெரிய மாங்காய்-1
காலிபிளவர்(சிறியது)-1
நல்லெண்ணெய்-கால் கப்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
கேசரிக்கலர்(சிவப்பு நிறமூட்டி)-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயைத் தோலின்றி துருவிக் கொள்ளவும்.
2.காலிபிளவரையும் துருவியோ அல்லது மிக்ஸியில் பொடித்தோ வைத்துக் கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து கொண்டு துருவிய மாங்காயைப் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.இதனுடன் உப்பு,காரப்பொடி சேர்க்கவும்.
4.தனியே ஒரு வாணலியில் காலிபிளவரைப் போட்டு, உப்பு, காரப்பொடி போட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
5.காலிபிளவரின் பச்சை வாடை மறைந்தவுடன் மாங்காயுடன் சேர்க்கவும். நிற்மூட்டியைச் சிறிதளவு தூவவும்.
6.ஊறுகாய் பதத்திற்குத் தொக்கும் தருவாயில், சிறிதளவு வறுத்த வெந்தயப்பொடியையும் காயத்தையும் சேர்க்கவும்.
7.எண்ணெயைக் காய்ச்சி தொக்கில் விடவும்.

கூடுதல் குறிப்புகள்

1.காரம் கூடி விட்டதென்றால் கேரட்டைத் துருவித் தனியே வதக்கி மேற்கண்ட ஊறுகாய் பதத்திற்குச் செய்து சேர்க்கலாம்.
2.வித்தியாசமான அசத்தலான ருசியுடன் காலிபிளவர் தொக்கு திகழும்.
3.இஞ்சியைத் துருவி இதனுடன் சேர்த்தும் தொக்கு தயாரிக்கலாம்.
4.காயமும் வெந்தயமும் தொக்கின் முடிவில் சேர்த்தால் தான் வாசனையும் சுவையும் அதிகம் கிடைக்கும்.
5.தொக்கு ஆறியவுடன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப எடுத்துப் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் கெட்டு விடும்.


டிப்ஸ்

1.ஊறுகாய் போன்றவற்றைக் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து உண்பது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.ஊறுகாய் வகையறாக்களைப் பிளாஸ்டிக் பாட்டில்களிலோ டப்பாக்களிலோ வைத்துப் பயன்படுத்துவது எதிர்வினையைத் தரும், கண்ணாடி பாட்டில்களிலோ பீங்கான் நாழிகளிலோ பயன்படுத்துவது நலம்.
3.சிலர் ஊறுகாய்களை எல்லா சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு உண்பர். அவ்வாறு செய்யாமல் குறைந்த அளவில் பயன்படுத்துவது தான் உடலிற்கும் நல்லது.
4.ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.உப்பும் காரமும் தூக்கலாக இருக்கும் ஊறுகாய்கள் நீண்ட காலத்திற்குக் கெடாது.
5.அந்தந்த கால நிலைகளுக்கு ஏற்ப கிடைக்கும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

oooOooo
                         
 
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   சமைத்து அசத்தலாம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |