நவம்பர் 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திருத்தலங்கள் : ஏரிகாத்த ராமன் - மதுராந்தகம்
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | | Printable version | URL |

சென்னையிலிருந்து மதுராந்தகம் சுமார் 25 கி.மீ தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. இங்கு செல்ல ரயில் வசதியும் உண்டு. இங்கு உள்ள இறைவனின் திருப்பெயர் கோதண்டராமன். 'ஏரிகாத்த ராமன்' என்றும் அழைக்கப்படுவார். இறைவியின் திருப்பெயர் ஜனகவல்லித் தாயார்.

தீர்த்தத்திற்குக் கல்லாறு என்றும், விருட்சம் மகிழமரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏரி மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். முன்பு இந்த ஏரி ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் உடைப்பெடுத்து பயிர்பச்சைகளையும் மக்களையும் அழித்து வந்தது. ஒரு அங்கிலேய கலெக்டர், 'ஏரி உடைப்பெடுக்காமல் ராமர் காப்பாற்றினால் ஜானகிக்கு கோயில் எழுப்புகிறேன்' என்று கூறினார். விடாது மழை பெய்து நீர்மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது. அப்போது கலெக்டரின் கண்களுக்கு ராமர் ஏரியைக் காப்பதுபோல் ஒரு காட்சி கண்டார். அதன் பின்னர் சொன்னபடியே அன்னை ஜானகிக்கு தனிக்கோயில் ஒன்று கட்டிக் கொடுத்தார்.

மதுராந்தகம் என்ற கிராமம் உத்தமச் சோழன் என்ற சோழ மன்னரால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக கொடுக்கப்பட்டது. அதற்கு 'மதுராந்தக சதுர்வேதி மங்கலம்' என்று பெயர் வந்தது.

நாயக்க மன்னர்களும் சோழ மன்னர்களும் இதை விஸ்தீரணப் படுத்தியுள்ளனர்.

 

| | |
oooOooo
                         
 
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |