நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : அலங்காரத் தோரணம் - கவர்னர் பதவி
    - மீனா
    | Printable version |

    மத்திய அளவில் அலங்காரப் பதவி ஜனாதிபதி என்றால் மாநில அளவிலான அலங்காரப் பதவி கவர்னர். அவ்வளவே!! மற்றபடி கவர்னர் பதவிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் எங்களைப் பொருத்தவரையில் இல்லை என்பதை கொஞ்சம் பூடகமாக வெகுநாட்களாகச் சொல்லிவருகின்றன மத்திய அரசுகள். அதற்கேற்ப கூட்டணிக் கட்சியினரையும் சொந்தக் கட்சியினரையும் திருப்தி செய்ய அவ்வப்போது கவர்னர்களை எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாற்றியும் நீக்கியும் வருகின்றன. மிகச் சமீபத்திலேயே கிட்டத்தட்ட 4 கவர்னரகள் எந்த ஒரு ஸ்திரமான காரணமும் இல்லாமல் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

    மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டாலோ, நெருக்கடி நிலை ஏற்பட்டாலோ மாநிலத்தை ஆளும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவியை அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் செளகரியத்திற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவு - அப்பதவிக்குண்டான மரியாதை காணாமல் போனதுதான். பீகாரில் கவர்னர் பதவியேற்பு விழாவில் மாநில முதல்வரும் கலந்துகொள்ளவில்லை, எதிர்கட்சித் தலைவரும் ஆப்செண்ட். இந்த விழாவிற்குப் போவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ? தங்களுக்கு மேலான பதவியில் அமரப்போகும் ஒருவர் பதவியேற்கும் பொழுது அவ்விழாவில் தாங்கள் கலந்துகொள்ளாமல் போவது எவ்வளவு மரியாதைக் குறைவான செயல் என்பதை அவர்கள் யாருமே எண்ணிப்பார்கவில்லை.

    நீட்டிய காகிதங்களில் பேசாமல் கையெழுத்துப் போட மட்டுமே கவர்னர் தேவை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கியிருப்பதாலேயே, அப்பதவிக்குண்டான மரியாதை கவர்னர்களுக்கு மறுக்கப்படுகிறது. கவர்னரை மாற்றும்பொழுதோ அவரைப் பதவியிலிருந்து நீக்கும்பொழுதோ மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநில அரசு ஊழியர்களையும், மாநில அரசியல் தலைவர்களையும் கலந்தாலோசித்தப் பிறகே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று சட்டம் போடும் பெரிய மனது இன்றைய அரசியல் தலைவர்கள் யாருக்கும் இல்லாதது நம் துரதிஷ்டம். தன்மானம் உள்ள சிலர் பதவியைத் தூக்கியெறிகின்றனர். அரசியல் நிர்பந்தங்களால் மேலும் சிலர் மத்தியில் என்ன சொல்லுகிறார்களோ அவர்கள் கட்டளைக்குக் கீழ்படிகிறார்கள்.

    வெறும் அலங்காரப் பதவியாக மட்டுமே கருதப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஒரு தனிப்பட்ட கம்பீரத்தையும் கெளரவத்தையும் ஏற்படுத்தினார் இன்றைய ஜனாதிபதி கலாம். அவரைப் போன்று கவர்னர் பதவிக்கும் ஒரு கம்பீரத்தையும் மரியாதையும் ஏற்படுத்தப் போகும் தலைவர் எங்கிருக்கிறார்? எப்போது வருவார்? வருவார்.. நிச்சயம் வருவார்.. நமது கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் வரை பொறுத்திருக்க வேண்டியது நம் கடமை..

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |