கிரீன்பீஸ் கபாப்
தேவையானவை
பட்டாணி - 1 கப் கடலைப் பருப்பு - 1 கப் புதினா - 1 கட்டு கொத்தமல்லி - 1 கட்டு இஞ்சி - 1 துண்டு பூண்டு - 3 பல் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் மைதா - 1 கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பு, பட்டாணி இரண்டையும் தனித்தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். நீரை வடித்துவிட்டு இரண்டையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, கொத்தமல்லி, புதினா, பூண்டு ஆகியவற்றைச் சுத்தம் செய்து எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை கடலைப்பருப்பு, பட்டாணி விழுதுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் மைதா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்றாக பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் மிதமான தீயில் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுங்கள். தக்காளி சாஸ¤டன் சுவைக்க சூப்பராக இருக்கும்.
·பிரைடு நூடுல்ஸ்
தேவையானவை
நூடுல்ஸ் - 200 கிராம் பீன்ஸ் - 10 கேரட் - 1 கோஸ் - 50 கிராம் வெங்காயம் - 1 வெங்காயத்தாள் - ஒரு கட்டு சோயா சாஸ் - 2 டீஸ்பூன் மக்காச் சோளமாவு - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பூண்டு - 3 பல் மிளகு பொடி - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஆறு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நுட்டுல்ஸைப் போட்டு இரண்டு நிமிடத்துக்கு வேகவிடுங்கள். பிறகு நீரை வடித்துவிட்டு நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட்டு அலசுங்கள்.
காய்கறிகளைச் சுத்தம் செய்து நீளநீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். சோயா சாஸ், மக்காச்சோளமாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், பூண்டை ஒன்றாகச் சேர்த்து நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்னெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கிய பூண்டு, பச்சைமிளகாயச் சேர்த்து வதக்குங்கள். பின்னர் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்குங்கள். உப்பு, சோயா சாஸ் கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சிறிது நேரம் கழித்து இறக்குங்கள்.
காய்ந்த தோசைக்கல்லில் நூடுல்ஸைப் பரப்புங்கள். எண்ணெய் ஊற்றி திருப்பிவிடுங்கள். நூடுல்ஸ் சற்று நிறம் மாறி மொறு மொறுப்பானதும் எடுத்துக் கொள்ளுங்கள். நூடுல்ஸைப் பரப்பி அதன் மீது காய்கறிக் கலவையை போடுங்கள். வெங்காயத் தாளைப் பொடியாக நறுக்கி, மிளகுத் தூள் சேர்த்து காய்கறிக் கலவை மேல் தூவி பரிமாறுங்கள். மொறு மொறு நூடுல்ஸ் ரெடி!!
|