Tamiloviam
நவம்பர் 06 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : La Belle Dame Sans Merci..!! - 1
- செந்தில் குமார் [crashonsen@gmail.com]
  Printable version | URL |

Part 1

என்னடா தலைப்பு இது, "La Belle Dame Sans Merci !!"- நான்

ப்பெரிஞ்ச் பாஸ்,"அழகிய  இரக்கமற்ற பெண்ணே!"-னு அர்த்தம், -- பாலு

"எப்ப இருந்துடா ப்பெரிஞ்ச் கிளாஸ் எல்லாம் போற,யாருடா அந்த பொண்ணு"

"எப்படி பாஸ் கண்டுபிடிச்சீங்க"

"நீ வேற எதுக்குடா ப்பெரிஞ்ச் கிளாஸ் போவ"

"சந்தியானு பேரு"

"யாருடா நம்ப சன் ம்யூசிக்  சந்தியா-வா"

"பாஸ், எந்த காலத்துல இருக்கீங்க, சன் ம்யூசிக் சந்தியா,ஹேமா சின்ஹா எல்லாம் எப்பவோ கல்யாணம் ஆகி போயாச்சி, இது விசாகபட்டினம் சந்தியா, என்ன அழகா தெலுங்கு பேசுறா தெரியுமா!!"

"ம்ம்ம்ம்"

"பாரதி,  "சுந்தர  தெலுங்கு"-னு சொன்ன  போதெல்லாம் நான் நம்பல"

"உன் காதலுக்கு ஏன்டா பாரதிய இழுக்கிற"

பாலு என் பள்ளி தோழன்,நண்பன்,ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறோம், பாஸ் என்பான், சில சமயம் வாடா போடா என்பான்.


வாரத்தின் முதல் நாள்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்க்கு கிளம்பி கொண்டிருந்தோம்.

சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன்.

பெங்களுரின் "புகழ் பெற்ற" தொம்லூர் மேம்பாலமும், அதை ஒட்டிய ஏர்போர்ட் ரோடும் வாகன நெரிசலில் வழிந்தது.ரிசப்ஷன் வழியே சென்றுகொண்டிருந்தோம்.


"பாலு,  நீங்க இன்னும் அந்த Pslam 1562 ஜோக் சொல்லவே இல்ல" -- பிலோஸியா,

அலுவலக ரிசப்ஷனிஸ்ட்,கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் கேரள பெண்.

"பாஸ், ஒரு நிமிஷம், அந்த ஜோக் சொல்லிட்டு வந்துடுறேன்"

"என்னடா சுஜாதா சார் நாவல்-ல வர்ற வசந்த் -னு நெனைப்பா, இவ கிட்டயும் ஆரம்பிச்சிடியா", என்று இழுத்துக்கொண்டு லிப்டிற்கு சென்றேன்.

" நாளைக்கு கண்டிப்பா சொல்றேன் பிலோ".

"பாஸ், இலங்கை தமிழர்களுக்கு அடுத்தபடியா அழகா தமிழ் பேசுறது நம்ப பிலோஸியா  தான்,

நீங்க என்ன சொல்றீங்க"

"சும்மா இருடா"

பாலுவிடம் பிடித்தது, அவனது புத்திசாலித்தனம்,பிடிக்காதது..

உங்களுக்கே தெரியும்.கிட்டதட்ட எல்லா அழகான பெண்களிடமும் காதல் கொண்டிருக்கிறான். அது காதல் இல்லடா என்றால் ஒப்புக்கொள்ள மாட்டான்.

இப்போ லேட்டஸ்ட்- சந்தியா.

லிப்டில், வினய்-யையும், அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ப்ரீத்தி-யையும் பார்த்தோம். வினய் எங்க டீமில் புதிதாக சேர்ந்தவன். Protocol stack நிபுணன். இளைஞன், வசீகரமானவன். ப்ரீத்தி அவனுக்கு தூரத்து சொந்தம் போல. பெங்களூர் பெண்களுக்கென்று

இருக்கும் சில  வகுக்கப்படாத  நியதிகளில் நிச்சயம் பொருந்துவாள். அழகிய வட்ட முகம், பெரிய கண்கள், அலட்சிய புன்னகை,அழுத்தமான உதடு. சிவப்பு நிற சேலை கட்டியிருந்தாள் என்று வர்ணித்தால், நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் அது தான்

உண்மை.சம்பிரதாய ஹலோ பரிமாறிக்கொண்டோம்.

பார்க்கிங்ல், வினய்-இன் பல்சர்-150-ல் நளினமாக உட்கார்ந்தாள். அழகாக வினய்-யை அணைத்துக்கொண்டாள். அவளின் கூந்தல் காற்றில் படப்படக்க, பல்சர் பறந்தது. பாலு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"மேட் பார் ஈச் அதர், இல்லயாடா பாலு" - என்றேன்

"இப்பவே சொல்ல முடியாது பாஸ், கல்யாணம் ஆகி பத்து வருசம் கழித்து தான் கமெண்ட் பண்ண முடியும்."

"நீ ஒரு பெஸிமிஸ்ட்டா"

"இல்ல பாஸ் நான் சொல்றது தான் நிஜம்"

அவன் சொல்றதும் சரி தான். மனிதனின் தன்மைகள் அடிக்கடி மாறுகிறது. சில நிகழ்வுகள் வாழ்வின் போக்கையே மாற்றிவிடுகிறது. எங்களுக்கும் தெரியவில்லை, அடுத்த அத்தியாயத்தில் அந்த ஜோடி பிரியப்போகிறது என்று.

(தொடரும்..)

oooOooo
                         
 
செந்தில் குமார் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |