Tamiloviam
நவம்பர் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : உருவானது சேலம் கோட்டம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

சேலம் கோட்டம் வேண்டி பல ஆண்டுகளாக தமிழக மக்கள் நடத்திய போராட்டத்துக்கு கடைசியில் வெற்றி கிடைத்துள்ளது. கேரளாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஒருவழியாக மத்திய அரசு சேலம் கோட்ட திறப்பு விழாவை நடத்தியுள்ளது.

தமிழகத்திற்கு வருவாயை அள்ளித் தரும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ரயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் வருமானத்தை அள்ளிக் கொடுத்தாலும் இந்த ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. புதிய ரயில் நிலையங்களை உருவாக்குவது, அதிக அளவில் ரயில்களை இயக்குவது உட்பட பல விதங்களில் இந்த ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுவந்தன. மக்கள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கோட்டம் உருவாக்க ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2006 டிசம்பரில் அதிகார பூர்வமாக, கோட்டம் அமைக்கும் அறிவிப்பை ரயில்வே வெளியிட்டது. கேரளாவின் பலத்த எதிர்ப்பிற்கிடையே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தமிழக அரசும் ஒரு முக்கிய காரணம். புதிய கோட்டம் அமைந்ததற்காக வாழ்த்துக்கள்.

தமிழக அரசின் போராட்டம் இந்த ஒரு வெற்றியோடு நின்று விடாமல் தமிழக மக்களின் ஜீவாதாரமான நதிநீர் பிரச்சனையிலும் கேரளா - கர்நாடக அரசிடம் போராடி முல்லைப் பெரியாறு மற்றும் காவிரியிலிருந்து நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடிநீரைப் பெற்றுத் தருவதிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறாமல் பொழிந்ததால்தான் தமிழகத்தைப் பொறுத்த வரை காவிரி மற்றும் மற்ற நதிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கிறதே தவிர அண்டை மாநிலங்களின் கருணையால் அல்ல..

சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட தங்களது கனவுத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு காட்டிவரும் முயற்சிகளில் ஒரு சிறு பகுதியையாவது இந்த நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் காட்டியிருந்தால் என்றோ இப்பிரச்சனை தீர்ந்திருக்கும். அரசு தன்னுடைய முயற்சியை சரிவரச் செய்யாமல் தமிழக மக்களின் தாகத்தைத் தீர்க்க சத்யசாயி சேவா நிறுவனம் போன்றவர்களின் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பது சரியல்ல.. இந்த உண்மையை உணர்வார்களா ஆள்வோர் ?

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |