(சென்ற வார தொடர்ச்சி)
நான் நினைச்ச மாதிரியே பாலு அலுவலகம் வந்தவுடன் சந்தியா புராணம் தான் பாடினான்.
"என்னடா ப்பெரிஞ்ச் கிளாஸ் எல்லாம் எப்படிடா போகுது"
"சந்தியா மாதிரியே ஸோ ச்வீட் பாஸ்"
"டேய் அந்த மங்களூர் பொண்ணு ஷாலினி என்னடா ஆனா?"
ஷாலினி, சந்தியாவுக்கு முன்னாடி பாலு மையல் கொண்ட பெண்.
"ஒரு முயல்-னால அந்த காதல் பிரிஞ்சுடிச்சி பாஸ்"
"என்னடா சொல்ற"
"ஷாலு, என் பிறந்த நாலுக்கு ஒரு முயல் குட்டி கிப்ட் தந்தா"
"ஹ்ம்ம்ம்"
"நம்ப பசங்க கிட்ட இத பத்தி சொன்னேன், அவனுங்களும், "உனக்கு முயல் கறி பிடிக்கும்கிறதாலே தான் முயல் கிப்ட் பண்ணி இருக்கா"-ன்னு சொல்லிட்டு அந்த முயல அப்படியே முயல் வறுவல் பண்ணி சைட் டிஷா சாப்பிட்டோம்"
"ம்ம்ம்ம் அப்புறம்"
"அடுத்த நாள் ஷாலு முயல் எப்படி இருக்கு-ன்னு கேட்டா, நானும் வெகுளியா முயல் கறி சூப்பர்-னு சொன்னேன், அவ்வளவு தான், அப்ப அழுந்துட்டு போனவ தான், மறுபடியும் என் கிட்ட பேசவே இல்ல"
"எனக்கு முயல் கறி புடிச்ச மாதிரி, ஷாலுவுக்கு முயல்-னா உயிர்-னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது"
"நீ திருந்த மாட்டடா"
"சந்தியா-க்கு பர்த்டே வருது பாஸ்,பர்த்டே அப்ப கரேக்டா விஷ் பண்ணா டிரிட் தரேன்னே சொல்லி இருக்கா, இப்ப அவ பர்த்டே கண்டுபிடிக்கனும்"
"எம்ப்ளாயி டேடாபேஸ்ல பாத்தா தெரியும்"
"அங்க தான் பாஸ் ஒரு கேட்ச், டேடாபேஸ்ல இருக்கிறது, 10-வதுக்காக ஸ்கூல்ல குடுத்த வுடான்ஸ் பர்த்டே, நேனு நிஜங்கா பர்த்டே ஆமே வெதுக்குதுன்னானு"
"என்னடா சொல்ற"
"பாஸ், இது தெலுங்கு, எப்படியும் அவ உண்மையான பர்த்டே கண்டுபிடிச்சி அவள மடக்கனும்"
" நீ என்னவோ பண்ணு, அந்த மெமரி லீக் ப்ராப்ளம் என்னடா ஆச்சி, ப்ரெஞ்ச்காரன் மெயில் பண்ணியிருக்கான்"
"வினய் பிக்ஸ் பண்ணிட்டான் பாஸ், பக் ரிப்போர்ட் சொல்லுது, இன்னைக்கு ரிலிஸ்ல போயிடும் போல"
வழக்கம் போல டெலி கான்ப்பரன்ஸ்-கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது என் மொபைல் அழைத்தது. வினய்-இன் அப்பா பேசினார்.குரல் உடைந்திருந்தது.வினய் அடிபட்டு செயின்ட் ஜான் -ஸ் ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கிறார்கள் என்ற அளவுக்கு
புரிந்தது.வெறும் அழுகை சத்தம் தான் கேட்டது.
பாலுவை அழைத்துக் கொண்டு அவனது பல்சர்-இல் கிளம்பினோம். காலை பதினோரு மணிக்கும் டிராபிக் இருந்தது.ஈஜிபுரா சிக்னல்,சோனி வோர்ல்ட் சிக்னல் தாண்டி, வாட்டர் டேங்க் சந்திப்பில் ஒன்வேயில் குறுக்கு வழியில் புகுந்து ஹாஸ்பிட்டலை
அடையும்போது பதினொன்னறை.
வண்டிய பார்க் பண்ணிட்டு, ரிசப்ஷனில் விசாரித்து ICU-யை நோக்கி நடந்தோம். அன்றலர்ந்த மலர்கள் போல அழகழகான குழந்தைகள். சிரிக்கின்றன, சில குழந்தைகள் அழுகின்றன.கீமோதெராபியினால் முடியிழந்த இளைஞன்,நோயுற்ற வயதான
பாட்டி, அவரை கூட்டி வரும் வயதான பெரியவர், வாழ்வின் நிலையாமையை பக்கத்தில் இருந்து பார்க்கும் மருத்துவர்கள். எல்லோரையும் கடந்து ICU-வை அடைந்தோம்.
ப்ரீத்தி அதே சிகப்பு கலர் சேலையில் இருந்தாள். சேலை கசங்கி இருந்தது.வினையின் அக்கா மடியில் தலை வைத்து அழுதுக் கொண்டிருந்தாள். வினய்-இன் அப்பாவும் அம்மாவும் தலையை பிடித்துக்கொண்டு எதையோ வெறித்துப்பார்த்துக்
கொண்டிருந்தனர். சூழ் நிலையின் தீவிரம் புரியாமல் நாங்கள் விழிக்க, வினையின் அக்கா கணவர், எங்களை வெளியே அழைத்து சென்று சொன்னபோது தான் தெரிந்தது, வினய் இறந்து அரை மணி நேரம் ஆகிறது என்று.
(தொடரும்..)
|