நவம்பர் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : திரைப்படங்களுக்கு வரிவிலக்கு - லாபம் யாருக்கு?
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | | Printable version | URL |

சில மாதங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கபடும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வெளியான பல திரைப்படங்களும் தமிழ் தலைப்புகளாக மாற்றப்பட்டன. "எம்டன் மகன்' என்ற திரைப்படம் "எம் மகன்' எனவும், "ஜில்லுனு ஒரு காதல்' படம் "சில்லுனு ஒரு காதல்' எனவும், "காட்·பாதர்' -"வரலாறு' எனவும், "சம்திங் சம்திங்', "உனக்கும் எனக்கும்' என மாறின. புதிய படங்களுக்கு மட்டுமல்லாமல் பழைய படங்களுக்கும் இச்சலுகை வழங்கப்படும் என்று முதல்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Something Somethingதமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 30 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கேளிக்கைவரி வருவாய் ரூ. 43 கோடி என்றும் இதில் 75 சதவீதம் தமிழ் திரைப்படங்கள் மூலம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கேளிக்கை வரி வருவாயில் 90 சதவீதம் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வரி விலக்கின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படப்போகும் கடும் நிதி நெருக்கடியை மாநில அரசே தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இத்தனை பிரச்சனைகளை உருவாக்கியுள்ள இந்த வரி விலக்கால் திரையரங்கக் கட்டணம் ஏதாவது குறைந்ததா என்று கேள்விக்கு விடை தேடினால் பதில் கட்டணம் என்றும் குறைக்கப்படவே இல்லை என்பதுதான். ஒரு படத்திற்கு கட்டணத்தைக் குறைத்துவிட்டு, அடுத்து வேறு மொழி திரைப்படம் வெளியிடும்போது அதற்காக கட்டணத்தை மாற்ற முடியாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வாதம். இந்தப் பிரச்சினையில் அரசு நேரடியாக தலையிடாதவரை, கேளிக்கை வரி குறைப்பினால் திரைப்பட ரசிகர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க யாரைத் திருப்தி செய்ய அரசு இந்த உத்திரவை வெளியிட்டது? மேலும் ஒரு படத்திற்கு தலைப்பை மட்டும் தூய தமிழில் வைத்துவிட்டு படம் முழுக்க வன்முறையும் ஆபாசமும் தாண்டவம் ஆடினால் தற்போதைய நடைமுறைப்படி அந்தப்படத்திற்கும் அல்லவா வரி விலக்கு கிடைக்கும்?

எனவே முதல்வர் தனது உத்திரவை நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழில் தலைப்பு இருந்தால் மட்டும் போதாது - அதன் காட்சி அமைப்புகளும் தரமானதாக இருக்க வேண்டும் வரிவிலக்கைப் பெற என்ற உத்திரவை முதல்வர் போடவேண்டும். மேலும் இந்த வரிவிலக்கால் படம் பார்க்க வரும் மக்களும் பயன் பெறும் வகையில் திரையரங்க கட்டணம் குறைக்க வழி செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்கான உண்மையான பலன் மக்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே இதன் மூலம் பயன்பெறுவார்கள். செய்வாரா முதல்வர் ?

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |