நவம்பர் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தமிழகம் - 50
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

தமிழகம் தனி மாநிலமாகி 50 ஆண்டுகளாகி விட்டன. அதன் கொண்டாட்டமும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க.வினால் கொண்டாடப்பட்டு விட்டது. உண்மையில் தமிழகம் தனி மாநிலமாகி என்ன சாதித்திருக்கிறது? எதனை இழந்திருக்கிறது? தமிழ்நாடு வளர்ந்திருக்கிறதா என்ற கேள்விகளை முன் வைத்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

புதை பொருட்கள், நாணயங்கள், செப்பேடுகள், கல் வெட்டுக்கள், புராணங்கள், கலைகள், கோயில்கள், இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவைகளின் மூலம் தமிழகம் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் பெயர் பெற்றவையாக அன்று முதல் இன்று வரை சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட தமிழகம் இன்று தனி மாநிலமாகி 50ம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. தமிழகம் தனி மாநிலமாக உருவானதற்கு பெரிய வரலாறே இருக்கிறது. தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்று அனைவரும் சென்னை ராஜதானியின் கீழ் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 1952ம் ஆண்டு ஆந்திரர்கள் தங்களுக்கு என்று தனி மாநிலம் வேண்டு பேராட்டம், உண்ணாவிரதம் என்று இறங்கி போராட ஆரம்பித்தனர். அப்பொழுது ஏற்பட்ட பெருங்கலவரத்தில்  பலர் இறந்தனர். இந்த நிலையை மாற்ற அப்போதைய பிரதமர் நேரு ஆந்திரர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கென்று தனி மாநிலம் ஏற்படுத்தப் படும் என்றார். அதன்படி 1953ம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக உருவானது.

அதே சமயம் 1953ம் ஆண்டு ஆசப் அலி தலைமையில் மாநில மறு சீரமைப்பு குழுவையும் மத்திய அரசு நியமித்தது. இக்குழுவின் படி மாநிலங்கள் மறுசீரமைப்பு பரிந்துரைகள் செய்யப்பட்டு 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகம் தனி மாநிலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி சென்னை மாநிலத்தில் இருந்த மலையாள மக்கள் அதிகம் இருந்த பகுதி கேரளா மாநிலமாக உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்த கொள்ளேகாலம் தாலுகா மைசு10ர் மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது. கன்னியாகுமரியும், செங்கோட்டையும் திருவிதாங்கூரில் இருந்து பிரித்து சென்னை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டு சென்னை தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இப்படி தமிழகம் தனி மாநிலமாக அமைக்கப்பட்டாலும் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சு10ட்டிய பெருமை அறிஞர் அண்ணாதுரையைத் தான் சேரும். அவர் தான் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயர் சு10ட்டினார். இப்படி தனி மாநிலமாக அமைந்த தமிழ்நாடு எல்லைகளை வரையறுக்க பல போராட்டங்களை சந்தித்தது தனிக்கதை. அதே போல் பல வருமானம், தொழில் வளம் மிக்க நகரங்களையும் இந்த மாநில பிரிப்பில் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் சென்று விட்டது. அதில் மைசு10ர், பெங்களூர், திருப்பதி போன்றவைகள் அடங்கும். தமிழகத்தில் முக்கிய திருத்தளமாக இன்று விளங்கி வரும் திருத்தனியைக் கூட பெரும் போராட்டத்திற்குப் பின் தான் மீட்க முடிந்தது என்கிறார் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியரான வெ.ராமன்


தமிழ் நாடு தனி மாநிலமான உருவாகி 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் கல்வித் துறையில் ஆங்கிலம், வழிபாட்டு தலங்களில் சமஸ்கிருதம், இசை அரங்கில் தெலுங்கு, மத்திய அரசு துறைகளில் இந்தி இந்த நிலைகள் தான் மேலோங்கிக் கொண்டு இருக்கிறது, தமிழ் மொழி உலகமெல்லாம் கேட்பதற்கு முன், தமிழகம் முழுவதும் எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்;பதற்காகவே மூன்று மொழிப் போர் வரை நடத்தியாகி விட்டது. ஆனால் நோக்கங்கள் தான் நிறைவேறவே இல்லை. தமிழின் பெயரில் பல தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் விழுப்புணர்வு பிரச்சாரத்தை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெறவே முடியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் வடமொழி மோகம் அதிகமாக எப்படி இருந்ததோ, அதே போல தற்பொழுது ஆங்கில மோகம் அதிகமாக இருக்கிறது. வட மொழிகள் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் குறிப்பாக இந்தி மொழியின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்கு தான் பெரியார் மொழிப் போரை தொடங்கி வெற்றி கண்டார். அத்தோடு தமிழ் மொழி சிர்திருத்தமும் செய்தார். இன்று நாம் பயன்படுத்தும் சொற்கள் பெரும்பாலானவைகள் பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பட்ட எழுத்துக்கள். அதே போல பாரதியார் தூய தமிழை அளிக்கும் வகையில் சுதந்திரம் என்பதற்கு விடுதலை என்றும், அபேட்சகர் என்பதற்கு வேட்பாளர் என்றும், அக்ராஸனர் என்பதற்கு தலைவர் என்றும், கம்யூனிஸம் என்பதற்கு பொதுவுடமை என்றும் சத்தம் இல்லாமல் சொல்லிக் கொடுத்தார். மக்களும் காலப் போக்கில் ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லிக் கொண்ட அண்ணாதுரை முதல்வராக இருந்த பொழுது இந்தி மொழி ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்ற பார்வையில் தமிழ்,ஆங்கிலம் என்று இரட்டை மொழிக் கொள்கையை கொண்டு வந்தார். இதனால் இந்தி மொழி தமிழகத்தில் பரவாது என்றும் வாதிட்டார். அவரது வாதமும் வெற்றி பெற்றது. 1967ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா அப்பொழுது, இன்னும் ஜந்தாண்டு காலத்திற்குள் தமிழ் பயிற்று மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், அனைத்து மட்டத்திலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால் அது அன்று முதல் இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. அறிஞர் அண்ணாவால் கொண்டு வரப்பட்ட தமிழ், ஆங்கில என்ற இரட்டைமொழிக் கொள்கையில் ஆங்கிலம் தமிழை மெல்ல மெல்ல வெற்றிகொள்ளத் துவங்கியதை நாம் இன்று பார்க்கிறோம். ஆனால் அண்ணா, தனக்குப் பின்னால் வருபவர்கள் ஆங்கிலத்தை விட தமிழை முதன்மைப் படுத்துவார்கள் என்று தான் நினைத்தார். ஆனால் திராவிட கட்சிகள் தான் அண்ணாவின் கருத்தை புரிந்து கொள்ளாமல், தமிழுக்கு எதிராக ஆங்கில மோகத்தை வளர்த்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை கட்டாயமாக்க முடியவில்லை. இத்தனைக்கும் பள்ளி, மற்றும் கல்லூரி இளைஞர்களை மொழிப் போரில் தூண்டிவிட்டு, அவர்களை தீ குளிக்க வைத்து, அதன் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தான் திராவிடக் கட்சியினர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இன்று அவர்களே தமிழகம் உருவான 50ம் ஆண்டைக் கொண்டாடுகிறார்கள் என்கிறார் பேராசிரியை சுதா.

காங்கிரஸ் சார்பில் ஆட்சி நடத்திய ராஜாஜி 1937ம் ஆண்டு தனது அமைச்சரவையை கூட்டி உயர்நிலைப்பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிமுகப்படுத்தினார். ராஜாஜிக்குப் பின் வந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தியை கட்டாய பாடமாக்கும் 17வது மொழிப் பிரிவை கொண்டு வந்ததினால் தான் 1965ம் ஆண்டு மாணவர்களின் இந்தி மொழியை  தார் பூசி அழிப்பு, தீ குளிப்பு, அதனை தொடர்ந்து துப்பாக்கி சு10டு என்று சுமார் 140 பேர் இறந்தனர். பல பள்ளிக் குழந்கைதள் கைது செய்ய்பட்டனர். பலர் படு காயம் அடைந்தனர். அதன் தாக்கத்தை மக்களிடம் பரப்பி பின்பு தான் திராவிட கட்சியினர் ஆட்சிக்கே வந்தனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து முதல் வேலையாக சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றினார்கள். 1970ம் ஆண்டு நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த சட்டம், 1978ம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலைக்கழகம் துவக்கம், 1984ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கென்று தனித் துறை உருவாக்கம், 1996ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஒரு அமைச்சர் என்று திராவிட கட்சியினர் தமிழுக்கு சில காரியங்களை செய்து இருக்கின்றனர்.  ஆனால் தமிழ் வளர உள்பலம் சார்ந்த வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை என்பது தான் உண்மை.

ஒரு மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான விழாவை ஏதோ கட்சிக் கூட்டம் நடத்துவது போல் இங்கு நடத்துகிறார்கள். ஆனால் அந்தக் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவில்லை. கொண்டாட ஆர்வமும் இங்கு இல்லை. ஒரு மாநிலத்தின் தாய் மொழியைக் காப்பாற்ற, அந்த மாநிலத்தில் போராட்டம் நடக்கும் கூத்து தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொhPசியஸ் போன்ற வேற்று நாடுகளில் தமிழ் தானாகவே வளர்கிறது. சில நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகக் கூட இருக்கிறது. ஆனால் இங்கு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கு யார் காரணம் என்றால் தமிழ், தமிழ் என்று சொல்லி ஆட்சியை பிடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் தான். இன்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு யாரும் தமிழை வளர்க்க முன் வருவதில்லை. ஆனால் 65 நாடுகளில் பரவி இருக்கும் தமிழர்கள் தான் தமிழை முன்வந்து வளர்க்கிறார்கள்.

50 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழகம் என்ன சாதித்திருக்கிறது என்றால் தனி நாடு கோரிக்கை கேட்டு போராடிய திராவிட கட்சியினர் இன்று தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டனர். மென் பொருள் துறையில் தமிழகமுமு;, தமிழர்களும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழகம் தான் இன்று அதிகமாக தொழிற்சாலைகளை பெற்றுள்ள மாநிலமாக வளர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவீத இட ஒதுக்கீடு இங்கு சாத்தியமாகி இருக்கிறது. கடவுள் மறுப்பு இயக்கம் பெரியாரோடு தோல்வி அடைந்து விட்டது. கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொள்ளப்பட்டான், ஒரு காலத்தில் கலக்கிய ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான். அனைவராலும் இறைவனுக்கு இணையாக பார்க்கப்பட்ட ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். தமிழ் பத்திரிக்கைகளின் தரம் உயர்ந்திருக்கின்றன. சாதி ஒழிப்பு முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால் கலப்பு திருமணங்கள் அதிகரிக்கின்றன. அனைத்துக் ஜாதிக்காரர்களும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேறி இருக்கிறது. ஜாதியை பயன்படுத்தி அரசியல் நடத்தப்படுகிறது. ஆனால் மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் தன்மை தமிழகத்தில் இல்லை இப்படி தனி மாநிலமாக உருவான தமிழ்நாட்டின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே சமயத்தில் தமிழ்நாட்டின் குறைகள் தான் என்ன? தமிழர்களை விழ்த்த தமிழர்களே போதும் என்ற கருத்தும் இங்கு வலுவடைந்து வருகிறது. யாரையும் பாராட்டும் தன்மை தமிழர்களிடையே இல்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கோ~ங்களும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்;டில் சினிமா மோகம் அப்படியே இருக்கிறது என்பதற்கு விஜயகாந்த் சாட்சியாக இருக்கிறார். சினிமாவை நம்பும் தமிழன் இயல்பைச் சொல்லும் வாசிப்பில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பண்பாடு,கலாச்சாரத்தின் ஆணி வேர் என்று சொல்லப்படுகின்ற தமிழக கிராமங்களில் கூட பழைய விளையாட்டுக்கள் ஒழிந்து கிரிக்கெட் இடம் பிடித்து விட்டது. விவசாயிகள் ஏழையாகவே இருக்கிறார்கள். இப்படி பல குறைகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்வோம், தனி மாநிலம் பெற்ற 50ம் ஆண்டு விழாவை கொண்டாடுவோம் வாருங்கள் தோழிகளே, தோழர்களே என்கிறார் முற்போக்கு இலக்கிய சங்கத்தைச் சேர்ந்த ஜோசப்.

|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |