நவம்பர் 17 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
கட்டுரை
அடடே !!
வானவில்
நையாண்டி
திரைவிமர்சனம்
பேட்டி
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : அடேய்...
- சம்பத்
| Printable version | URL |

ஸ்ரீகாந்த் மாதிரி மாப்பிளை வேணும்னு நம்ம முனுசாமியோட பொண்ணு சொல்றாபா.

ஸ்ரீகாந்தா ? யாருபா அது ?

அட. பார்த்திபன் கனவுல வந்தாரே, அவருதான்.

பார்த்திபனோட கனவுல ஸ்ரீகாந்த் ஏம்பா வரனும் ?

அடேய், வழக்கம் போல குழப்பாதே. நீ சொல்லறது நடிகர் பார்த்திபன். நான் சொல்றது "பார்த்திபன் கனவு" படத்துல நடிச்ச நடிகர் ஸ்ரீகாந்த்.

சரி, இந்த ஸ்ரீகாந்த், பார்க்கிறதுக்கு எப்படி இருப்பாரு ?

நம்ம அரவிந்த் சாமி போல இருப்பாருன்னு வெச்சிக்கோயேன்.

யாருபா அரவிந்த் சாமி ?

ரோஜாவுல நடிச்சாரே அவருதான்.

எந்த ரோஜா ?

அடப்பாவி மக்கா. ரோஜாவுக்காக பத்து வருஷம் முன்னாடி ஏ.ஆர். ரஹமான் தேசிய விருதெல்லாம் வாங்கி இருக்காரு. சாவகாசமா எந்த ரோஜான்னு கேட்கறியே ?

என்னது ? ரோஜாவுக்காக ஏ.ஆ. ரஹமான் தேசிய விருது வாங்கினாரா ?

ஆமாம்.

ஏன் அவங்களுக்கு என்ன ஆச்சு ?

என்னடா கேட்கறே ?

இல்ல .. ரோஜாவுக்கு பதிலா ஏ.ஆர். ரஹமான் ஏன் தேசிய விருது வாங்கனும், அவங்களே வாங்கியிருக்கலாமே ?

மடையா நான் சொல்றது ரோஜாங்கிற படம். மணிரத்னம் எடுத்தது.

ஓ, அதுவா, இப்ப ஞாபகத்துக்கு வருதுபா. இந்த காஷ்மீர் தீவிரவாதத்தை வெச்சு எடுத்த படம்தானே ?

அப்பாடா ! இப்பவாவது உன் மண்டையிலே ஏறிச்சே. அதுல நடிச்சவருதான் அரவிந்தசாமி. புரிஞ்சுதா ?

நல்லாவே புரிஞ்சுது. இதுக்கு ஏம்பா இப்படி தலை சுத்தற அளவுகு பழைய படம் எல்லாம் சொல்லி, கொழப்புறே.. நானாயிருந்தா சிம்பிளா சொல்லியிருப்பேன்.

தோடா ! எப்படி ?

சமீபத்துல வந்துச்சே "கனா கண்டேன்" அதுல நடிச்சவருதான் அரவிந்த சாமி, அவரு சாயலில் தான் ஸ்ரீகாந்த் இருப்பாருன்னு.

ஆண்டவா !!!

oooOooo
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |