நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : மன்னிக்கலாமா உமாவை?
    - மீனா
    | Printable version |


    கடந்த 10ஆம் தேதி நடந்த பா.ஜனதா கட்சிக் கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் பா.ஜனதாவின் முக்கிய பெண் உறுப்பினரான உமா பாரதி. இன்று பா.ஜனதா தலைவருக்கு அவர் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில் தலைவரிடம் மன்னிப்புக் கேட்க தான் தயார் என்றும் அதே மாதிரி தன்னை அவமதித்த தலைவர்கள் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    பா.ஜனதா கட்சியிலேயே அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருபவர் உமா பாரதி. அதிரடியாக பேசுவதில் வல்லவரான அவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடி முடிவுகளைத் தடாலடியாக எடுக்கும் அவர் பொறுப்பாக பேசத் தவறுவதுதான் அவரது தலையாய பிரச்சனை. சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்குவதில் அவருக்கும் சுஷ்மாவிற்கும் இடையே நடைபெற்ற போட்டியை நாடே விமர்சித்ததுடன், பல பா.ஜனதா தலைவர்களே முகம் சுளித்தார்கள். எளிதில் உணர்சிவசப்படும் - அரசியல் முதிர்ச்சி சிறிதும் இல்லாத தலைவராகத் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் உமா பாரதி.

    அரசியலில் ஒரு நல்ல தலைவராக இருக்க மிக முக்கியமான பண்புகளில் முக்கியமான பொறுமை மற்றும் தீர்க்க சிந்தனை ஆகிய இரண்டும் இல்லாதவர் உமா பாரதி. சர்ச்சைகளில் அவர் சிக்குவது என்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் கட்சியில் தனக்கிணையான மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை மரியாதைக் குறைவாக பேசுவது மன்னிக்க முடியாத குற்றம். இத்தகையத் தவறை யார் செய்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாவது வழங்கப்படவேண்டும். மன்னிப்புக் கேட்கும் கடிதத்திலும் அதிகார தொனியில் கட்சித் தலைவருக்கே கட்டளையிடும் உமா பாரதிக்கு பா.ஜனதா மேலிடம் எதற்காக தண்டனை வழங்குகிறதோ இல்லையோ இத்தகைய பொறுமையற்ற - பொறுப்பற்றத் தன்மைக்காக தண்டனை நிச்சயம் வழங்கவேண்டும். இக்கடிதத்தைக் காரணமாகக் கவனத்தில் வைத்து அவருடைய தற்காலிக நீக்கத்தை பா.ஜனதா தலைவர் தளர்த்தினால் கட்சியின் மற்ற தலைவர்களின் அதிருப்திக்கு அவர் நிச்சயம் ஆளாக நேரிடும். என்ன செய்யப்போகிறார் அத்வானி? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |