நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : அவல் பேல் பூரி
    - மீனா
    | Printable version |

    அவல் பேல் பூரி

    தேவையானவை

    பொரித்த அவல் 2 கப்
    பெரிய வெங்காயம் 1
    விரல் நீள அளவு வெள்ளரிக்காய் 1
    கேரட் 1
    மாங்காய் 1 துண்டு
    புதினா கொத்தமல்லி சிறிதளவு
    வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன்
    வறுத்த பட்டாணி 1 டேபிள் ஸ்பூன்
    வறுத்த பாசிப் பயறு 2 டேபிள் ஸ்பூன்
    காராப்பூந்தி 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் பொடி அரை டீஸ்பூன்
    மிளகு பொடி அரை டீஸ்பூன்
    கறுப்பு உப்பு கால் டீஸ்பூன்
    உப்பு சிறிதளவு
    எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    காய்களைப் பொடியாக நறுக்குங்கள். அவலைச் சுத்தம் செய்யுங்கள். அவல், காய் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையைக் கலந்து சாப்பிட லாம். கூடுதல் சுவை நாக்கைச் சொக்கவைக்கும். மிகவும் எளிதாகச் செய்யக்கூடிய அருமையான மாலை நேர டிபன் இது.



    கோஸ் சமோஸா

    தேவையானவை

    (மேல்மாவுக்கு)

    மைதா 1 கப்
    கோதுமை மாவு 1 ஸ்பூன்
    உப்பு அரை டீஸ்பூன்

    (உள் பூரணத்திற்கு)

    கோஸ் 100 கிராம்
    பெரிய வெங்காயம் 3
    மிளகாய் 1
    சீரகம் அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
    மிளகாய் பொடி 1 டீஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

    செய்முறை

    மைதா, கோதுமை மாவு, உப்பு, அளவான தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாகப் பிசையுங்கள். கோஸ், வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், கோஸ், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன் றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங் கள். கோஸ் அரைப் பதம் வெந்ததும் உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

    மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகள் எடுத்து நீளவாக்கில் மெல்லியதாக இட்டுக்கொண்டு, அதை மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டுங்கள். அதன் ஒவ்வொரு முனையையும் சிறு சிறு முக்கோணங் களாக மடித்து உள்ளே கோஸ் கலவையை நிரப்புங்கள். பிறகு மீதமுள்ள மாவை, கலவை பிரிந்து வெளியே வராத படி சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒட்டுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பிறகு தீயை மிதமாக்கி, சமோஸாக்களைப் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுங்கள். தக்காளி சாஸ¤டன் சாப்பிட ஜோராய் இருக்கும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |