Tamiloviam
நவம்பர் 22 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ம.ஜனதாதளத்தின் பச்சை துரோகம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

பதவியேற்ற ஒரு வாரத்திலேயே கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு தனது பதவியை இழந்துள்ளது. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசுக்கு எதிராக மதசார்பற்ற ஜனதா தளம் ஓட்டு போடுவது என முடிவெடுத்ததை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் கர்நாடக அரசியல் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது.

Kumarapappa, Edaiyoorappaதங்களுடைய சந்தர்பவாத அரசியல் முகத்தை தேவகவுடாவும் அவரது மகனும் கடந்த மாதம் காட்டிய போதே பா.ஜனதா விழித்துக்கொண்டு அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தேவகவுடாவும் அவரது மகனும் காட்டிய ஆசை வார்த்தைகளை நம்பி தென் மாநிலங்களில் தாங்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்று எண்ணி - பிறகு அவர்களது நம்பிக்கை துரோகத்தால் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டதுதான் பா.ஜனதாவிற்கு மிச்சமானது.

தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஒரு சந்தர்பவாத அரசியல் கட்சி - தங்களுடைய சுயலாபத்திற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் - பதவிக்காகவே அலைபவர்கள் அவர்கள் என்பதில் இனி மக்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது. சரி.. பா.ஜனதாவின் நிலை என்ன? யோக்கிய சிகாமணிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் அவர்கள் மட்டும் பதவிக்காக அலையவில்லையா என்ன ?

ம.ஜ.தளக் கட்சி நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என்றும் ஆட்சி அதிகாரத்துக்காக எந்தவொரு தாழ்வான நிலைக்கும் அக்கட்சித் தலைவர்கள் செல்லக்கூடியவர்கள் என்றும் தற்போது குற்றம் சாட்டியுள்ள எடியூரப்பா ஒரு வாரத்திற்கு முன்பு சொன்னது என்ன ? தேவகவுடா மற்றும் அவரது கட்சியினர் தங்கள் மீது காட்டிய நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்களைப் போன்ற உத்தமர்கள் யாரும் இல்லை என்றும் சொன்னவர்தான் எடியூரப்பா. இத்தனைக்கும் கடந்த மாதம் ஒப்பந்தப்படி ஒழுங்காக ஆட்சியை குமாரசாமி எடியூரப்பாவிடம் ஒப்படைக்கவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு - இனி தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே முடியாது என்ற நிலையில் தான் தான் பா.ஜனதாவிற்கு ஆதரவு அளிக்க குமாரசாமி மற்றும் தேவகவுடா முன்வந்தார்கள்.

பா.ஜனதா மட்டும் 10 நாட்களுக்கு முன்பாக மதசார்பற்ற ஜனதாதளம் அளித்த ஆதரவை மறுத்து மாநிலத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசை வலியுறுத்தியிருந்தால் மக்கள் மத்தியில் அவர்களது மதிப்பு உயர்ந்திருக்கும். அப்போது அதைச் செயாமல் ஆட்சி தங்கள் கைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் தேவகவுடாவிற்கு பல்லக்குத் தூக்கிய பா.ஜனதா மக்கள் மத்தியில் தங்களது மதிப்பை முற்றிலும் இழந்துவிட்டது.

மதசார்பற்ற ஜனதாதளத்தின் மீது மக்களுக்கு என்ன அபிப்பிராயம் உள்ளதோ கிட்டத்தட்ட அதே அபிப்பிராயம்தான் பா.ஜனதா மீதும் மக்களுக்கு உள்ளது. இதை வரும் தேர்தல்களில் மக்கள் நிச்சயம் சம்மந்தப்பட்ட கட்சிகளுக்கு உணர்த்துவார்கள். அதன் பிறகாவது இத்தகைய அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்று பார்க்கவேண்டும்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |