நவம்பர் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திருத்தலங்கள் : திருக்குறுங்குடி
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | | Printable version | URL |

நாங்குநேரி - காரைக்காடு மார்க்கத்தில் மகேந்திர மலை இருக்கிறது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் நம்பி ஆற்றங்கரையில் இத்தலம் இருக்கிறது. ஆலயம் மிகவும் பெரியது, புராதனமானது. இத்தலத்தில் பெருமாள், நின்றநம்பி, இளநம்பி, கிடந்த நம்பி, குறுக்குடி நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து திருக்கோலங்களில் சேவைசாதிக்கிறார்.

வாமனத்தலமாதலால் திருக்குறுங்குடி என்று பெயர் ஏற்பட்டு வாமன நம்பியின் சந்நதி திருப்பாற் கடற் என்ற ஆற்றங்கரையில் இருக்கிறது. இவரை திருப்பாற் கடற் நம்பி என்றும் அழைப்பார்கள். மலையைத் தூரத்திலிருந்து பார்த்தால் முக்கோணவடிவமாக தோற்றமளிக்கும். திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதர் இங்கு அனுப்பியதாகக் கூறுவர். ஆழ்வார் தன் அந்திய காலத்தை இங்கு கழித்தாராம்.

உடையவர் சந்நதியும் இங்கே இருக்கிறது. மகேந்திரமலையின் மீது 9 கி.மீ தூரம் சென்றால் மலைமேல்நம்பி ஆலயம் இருக்கிறது. இவர் ஸ்ரீனிவாசர். சனிக்கிழமை மிக நல்ல நாளாகும். பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். காட்டுப் பிரதேசமாதலால் பகலில்தான் மக்கள் ஆலயத்திற்குக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இது நம்மாழ்வார் அவதாரத்திற்குக் காரணமானதலம். ஆழ்வாருடைய பெற்றோர் மக்கள் செல்வம் வேண்டி திருக்குறுங்குடிக்கு வந்து நம்பியை ஆராதித்தனர். அதன் பயனாக நம்மாழ்வார் அவதாரம் உண்டாயிற்று.

| |
oooOooo
                         
 
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |