நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : மீண்டும் மந்திரியாகிறார் சிபு சோரன்
    - மீனா
    | Printable version |

    மத்தியில் மன்மோகன் சிங் பதவிக்கு வந்து முழுசாய் 6 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவரது அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றங்கள் கொஞ்சம் அசாதாரணமாகவே தோன்றுகின்றன. எந்த அரசிலும் இல்லாத சாதனையாக ஏகப்பட்ட ஊழல் பெருச்சாளிகளும் கிரிமினல் குற்றவாளிகளும் அமைச்சர்களாக ராஜமரியாதையுடன் பதவியேற்றார்கள். பதவிக்கு வந்த 4ஆம் நாளே அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளின் காரணமாக அவர்கள் தங்கள் பதவிகளைத் துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விசாரணை முடிந்து குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் முன்னரே மீண்டும் அவர்கள் அமைச்சர்களாவது எந்த விதத்தியில் சரி? இப்படிச் செய்வதற்கு பதிலாக அவர்கள் தங்கள் பதவியிலேயே இருந்திருக்கலாமே? எதற்காக இந்த ராஜினாமா நாடகம்?

    நிலக்கரித்துறை அமைச்சர் சிபுசோரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். வந்ததும் வராததுமாக இழந்த அமைச்சர் பதவிக்கு அடி போட்டு அதை மறுபடியும் பெற்றுவிட்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போவதை முன்னிட்டே இவருக்கு மீண்டும் அடித்தது யோகம். மன்மோகன் சிங்கின் இந்த நடவடிக்கை அவர் எந்த அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. லேட்டஸ்டாக லல்லு பிரசாத் யாதவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகியுள்ளார். லல்லுவோ இன்னமும் விடாப்பிடியாக மந்திரியாக தொடர்கிறார். ஆனால் எத்தனை நாட்களுக்கு என்பது யாருக்கும் தெரியாது.

    தமிழகத்தில் நடை பெறும் அமைச்சர்கள் மாற்றம் ஆட்சி அதிகாரம் ஏகோபித்தவகையில் ஒருவர் கையில் இருப்பதால் ஏற்படும் நிகழ்வு என்றால் மத்தியில் நடைபெறும் அமைச்சர்கள் மாற்றம் ஆட்சி செய்பவரிடம் ஒரு அதிகாரமும் இல்லை என்பதால். இதைப்போல மத்தியில் அமைச்சர்களாகப் பதவி வகிப்பவர்கள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகுவதும் பிறகு பல்வேறு அரசியல் காரணங்களுகாக அவர்களே மீண்டும் அமைச்சர்களாவதும் நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவாகும். அந்தந்த துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளே துறை அமைச்சர் யார் என்று தெரியாமல் தடுமாறும் நிலை மெள்ள மெள்ள தற்போது இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கும் ஸ்திரத்தன்மைக்கும் அஸ்திவாரமாக இருக்க வேண்டிய அமைச்சர் பெருமக்கள் அடிக்கடி சிறைக்குச் சென்றுவந்தால் உலக அரங்கில் பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழத் துடிக்கும் நம் தேசத்திற்கு பிற நாடுகள் மத்தியில் என்ன மதிப்பு இருக்கும்?

    வேட்பாளர் மற்றும் அமைச்சராகத் தேவையான தகுதி நிலைகளை கடுமையாக கடைபிடித்தால் மட்டுமே இத்தகைய அவலங்களைத் தடுக்க இயலும். இல்லையென்றால் குற்றவாளி - கம் அமைச்சர் என்ற பதவியை நம் அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் தக்க வைத்துக் கொள்வார்கள். நாட்டு மக்களாகிய நாம்,  இவர்களைத் தேர்ந்தெடுத்த பாவத்தை எந்த கங்கையில் சென்று கரைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |