நவம்பர் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ஊழல்பெருச்சாளிகளும் கொலைகாரப்பாவிகளும்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Sidhuஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏதோ கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுபவரைப் போல 2 1/2 ஆண்டுகளில் 3 முறை தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிபுசோரன். முதல்முறை ஜார்கண்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து. பிறகு ஜார்கண்ட் மாநில முதல்வராகும் ஆசையில்.. தற்போது உதவியாளரை கொன்ற வழக்கில் கொலையாளி இவர் என்று தீர்ப்பு வந்த பிறகு. அதுவும் முதல் முறையும் கடைசி முறையும் பிரதமர் கேட்டுக்கொண்டதற்காக.. இவர் நிலை இப்படி என்றால் பா.ஜ.கட்சி எம்.பி.யான சித்து மீதான கொலைவழக்கிலும் சித்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆக நம் நாட்டின் மத்திய மந்திரியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இத்தனை நாட்களாக கொலைகாரர்கள் இருந்து வந்துள்ளார்கள்.

பிரபல சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவியையும் அவருக்கு ஜூனியரான சீமாவையுமே தங்கள் ஆதாயத்திற்காக கட்சியில் சேர்த்துக்கொண்ட நேர்மையான அரசியல்வாதிகள் வாழும் இந்நாட்டில் நாம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் என்ற விரக்தி தற்போது பெரும்பான்மையான மக்களிடையே வந்திருக்கும். சிபுசோரனும் சித்துவும் நீதிமன்றத்தால் தற்போது தண்டனை பெற்றவர்கள் - இன்னும் எத்தனையோ மந்திரிகள், எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன. அவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தால் தான் நம் நாட்டை எத்தனை கிரிமினல்கள் ஆண்டு வந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியும்.

"நம் நாட்டை ஆள்பவர்களும் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றம் - நாடாளுமன்றம் செல்பவர்கள் பொருளாதார மேதைகளாகவும் அறிவில் சிறந்த சான்றோர்களாகவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் ஒரு நல்ல குடிமகனாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்பில் என்ன தவறு?" மக்களின் இந்தக் கேள்வி ரொம்பவும் நியாயமானதுதான்...

ஆனாலும் தங்களுக்கு ஊதிய உயர்வு தேவை என்றாலோ, அரசு கொண்டு வரும் ஏதாவது ஒரு சட்டத்திருத்தம் தங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றாலோ கட்சி பேதங்களை மறந்துஅனைவரும் ஒன்று கூடி தேவையான மசோதாக்களை இயற்றி தங்களுக்கு தேவையானவற்றை சாதித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்வார்களா என்ன? இத்தகைய கயவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உண்டு என்பதால் ஒரு கட்சியுமே இத்தகையத் தீர்மானத்தைக் கொண்டுவராது என்பது நிச்சயம்.

கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நம் நாட்டை ஆள்வதைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே வழி உச்சநீதிமன்றம் மூலமாக சட்டத்தை இயற்றுவதுதான். ஆனாலும் உச்சநீதிமன்றம் போடும் எத்தனையோ உத்திரவுகளை நம் அரசியல்வாதிகள் மீறும் இந்நாட்களில் தங்களுடைய அடிப்படை உரிமைகளில் கைவைக்கப்போகும் இச்சட்டத்தை ஒருபோதும் செயலாக்க விடமாட்டார்கள் என்பது உறுதி. ஆக மொத்தத்தில் இந்தியா வல்லரசாகும் என்ற நமது கனவு நிஜமாகுமோ என்னவோ இந்தியாவில் நல்லரசு நடக்கும் என்ற சராசரி குடிமகனின் கனவு நிச்சயம் நிஜமாகப்போவதில்லை.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |