டிசம்பர் 02 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
நையாண்டி
கட்டுரை
அறிவிப்பு
மேட்ச் பிக்சிங்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : அமைதிப்படை
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  எங்கள் ஊருக்கு பக்கத்திலொரு அழகான கிராமம். ஆனால், ஏறக்குறைய நாற்பது வருஷத்துக்கும் மேலாக அது அமைதியை தொலைத்திருக்கிறது. காரணம், பங்காளி சண்டையும் அதனால் தொடரும் குடும்ப தகராறுகளும்தான். சண்டை போடுவதையே முழுநேர வேலையாக, மூன்று தலைமுறையாக ஒரு குடும்பத்தினர் செய்து வந்திருக்கிறார்கள். இரண்டு பக்கத்திலும் கத்திக் குத்து, அரிவாள் வெட்டு, சரண்டர், கோர்ட், கேஸ் எல்லாமே சகஜம்தான். சட்டம் தனது கடமையைத்தான் செய்கிறது. காவல்துறையும், நீதித்துறையும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் தவறுவதில்லை. ஆனாலும் ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் குடும்பத் தகராறு அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்து விடுகிறது.  குற்றங்களும், காவல்துறையினரும், நீதிமன்றங்களும்
  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இது மாதிரி குடும்ப தகராறு, ஜாதி பிரச்னை, மதக்கலவரம் போன்ற சமூகத்தில் புற்றுநோய் போல புரையோடிருக்கும் விஷயங்களையெல்லாம் தீர்த்து வைத்து சமூகத்தை அமைதியாக வைத்திருக்க காவல்துறை, நீதித்துறை மட்டும் போதுமா?

  கலவரங்களை ராணுவமோ, காவல்துறையோ அடக்கிட முடியும். நீதி துறையும் விசாரித்து குற்றவாளிகளை தண்டித்துவிட முடியும். ஆனால், முழுமையான மனமாற்றமோ, சமாதானமோ கிடைக்க ஏதாவது ஒரு அமைப்பு உண்டா? அப்படியொரு அமைப்பை ஊருக்கு ஊர் உருவாக்க வேண்டும் என்கிறார் காந்திஜி. ஊர் தோறும் அமைதிப்படை அமைப்பது என்பது சவாலான விஷயம்தான். ஆனால், அமைதிப்படையின் மூலம் இதெல்லாம் சாத்தியமே என்கிறார் காந்திஜி.

  அமைதிப்படையின் உறுப்பினர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? அவற்றில் உறுப்பினராவதற்கு என்ன தகுதி? ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே காந்திஜியிடம் பதில் இருக்கிறது. அவற்றையே பத்து யோசனைகளாக சொல்கிறார்.

  1. அமைதிப்படையின் உறுப்பிராக இருப்பவருக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும். முக்கியமாக கோபமின்றி, பயமின்றி, பழிவாங்கும் உணர்ச்சியின்றி செயல்படும் மனப்பக்குவம் வேண்டும்.

  2. உறுப்பினர், உலகிலிருக்கும் முக்கியமான மதங்கள் அனைத்தையும் சமமாக மதிக்கவேண்டும். மதங்களின் பொதுவான கொள்கைகள் பற்றியும் அவை அனுசரிக்கப்படும் விதம் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

  3. அந்தந்த ஊர்களுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்களே உறுப்பினராக இருக்கமுடியும்.

  4. இவ்வேலையை தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ செய்யலாம். தோழர்கள் இருக்கும்பட்சத்தில் கலந்து பேசி ஒரு படையாகவே செயல்படலாம்

  5. உறுப்பினர், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்களுக்கு நேரடியாக உதவி செய்து, அவர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கவேண்டும். இது சங்கடமான நேரங்களில் அவரது நம்பகத்தன்மைக்கு உதவியாக இருக்கும்.

  6. சமாதான உறுப்பினர் பாரபட்சமற்றவராகவும், நீதி வழியில் நடப்பவர் என்று புகழ்பெற்றவராகவும் இருக்கவேண்டும்.

  7. நெருப்பு மூட்டும் வரையில் காத்திருக்கலாம் என்றோ அல்லது புயல் ஓய்ந்த பிறகு வேலையை ஆரம்பிக்கலாம் என்றோ காத்திருக்காமல் பிரச்னையில் முதல் ஆளாக களமிறங்க வேண்டும்.

  8. அமைதிப்படை பெரிய அளவில் இருக்கும் பட்சத்தில் முழுநேர ஊரியர்கள் இருப்பது நலமே. இருந்தாலும் பகுதிநேரமாக இப்பணியை செய்வதே உத்தமம்.

  9. வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இம்மாதிரியான அமைதிப்படையில் அங்கம் வகிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம் பல தரப்பட்ட மக்களை தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும்

  10. அமைதிப்படைக்கென்று தனியான ஒரு சீருடை இருப்பது நல்லது.

  காந்திஜியின் எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் இப்படியொரு அமைதிப்படை ஊருக்கு ஊர் வேண்டுமென்று நினைப்பதே பேராசை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால்தான் என்னவோ அமைதிப்படை அமைப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல அவர் முயற்சிக்கவேயில்லை.

  'அமைதிப்படைகள் அமைப்பதில் நான் நேரடியாக பங்கெடுத்துக்கொள்வேன் என்கிற தவறான நம்பிக்கை வைக்கவேண்டாமென்று மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். எனக்கு அதற்க வேண்டிய உடல்நலமோ, சக்தியோ, நேரமோ இல்லை. நான் அவசியம் செய்தாகவேண்டிய வேலைகளை செய்து முடிப்பதே என்னால் முடியாத காரியமாக இருக்கிறது. அவ்வப்போது இதுபோன்று கடிதங்கள் மூலமாகவோ பத்திரிக்கைகள் மூலமாகவோ என்னால் யோசனைகள்தான் தெரிவிக்க முடியும். ஆகையால், அமைதிப்படை அமைக்கும் எண்ணத்தை பாராட்டி தமக்கு திறமை உண்டென்று நம்புகிறவர்கள் தாங்களாகவே இதை ஆரம்பிக்கலாம். அமைதிப்படையால் பெரிய காரியங்களை சாதிக்கமுடியும் என்றும் எப்படியும் நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது'  (யங் இந்தியா, 18.6.1938)

  அமைதிப்படை தத்துவம் சாத்தியமானதே என்பதை சில செஞ்சிலுவை சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் நிரூபித்து வருகின்றன. ஆனாலும், அவை போர்க்காலங்களிலும், பதட்டம் நிறைந்த கலவர பகுதிகளிலும் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எந்த நாடும், அமைதிப்படையை சமூகத்தின் நிரந்தரமான அங்கமாக வைத்துக்கொள்ளவில்லை. காந்திஜியின் கனவான அமைதிப்படை இனியாவது நிறைவேறுமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |