டிசம்பர் 02 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
நையாண்டி
கட்டுரை
அறிவிப்பு
மேட்ச் பிக்சிங்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : சுப்ரமணியம் சுவாமியுடன் ஒரு சந்திப்பு
  - திருமலை ராஜன்
  | Printable version |

  சுப்ரமணியம் சுவாமி. இந்த வசீகரமானப் பெயரை முதன் முதலில் கேட்டது எமர்ஜென்சி காலத்தில்தான். அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற சுப்ரமணியம் சுவாமி, ஆனானப் பட்ட எமர்ஜென்சி காலத்து இந்திராவின் போலீசுக்கே டிமிக்கி கொடுத்தவர். அவரை ஊரெல்லாம் தேடிக் கொண்டிருக்க பாராளுமன்றத்தில் நுழைந்து கையெழுத்துப் போட்டு விட்டு, மாறு வேடத்தில் அமெரிக்காவிற்கு தப்பி ஓடி விட்டார் என்ற செய்தி வாய் பிளக்க வைத்தது. மனதில் ஒரு அரசியல் ஜேம்ஸ்பாண்ட் ஆகவே உருவெடுத்து விட்டார் அந்த ஆசாமி. பெத்தப் படிப்பு, டாக்டர் பட்டம், வீர சாகசம், அமெரிக்கா என்று ஏறக் குறைய ஒரு ஹீரோ ரேன்ஜுக்கு சென்று விட்டது அந்த பெயர் மீது இருந்த பிரமிப்பு. கால ஓட்டத்தில், அதே ஹீரோவை, ஒரு ஜோக்கராக, ஒரு வில்லனாக, பலவித குணச்சித்திர வேடங்களில் பார்த்து விட்டாலும், நிச்சயம் இன்றைக்கும் சுவாமி மீதுள்ள சுவாரசியம் மட்டும் குறையவேயில்லை. அவர் மீதிருந்த பல்வேறு பிரமிப்புகளில், பல தீர்ந்து போய், இப்பவும் ஒன்றிரண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சாமியின் பிரபல மிரட்டல்களையும், திடுக்கிடும் புகார்களையும்,என்றைக்கு எந்த ஆட்சி கவிழும் என்ற ஜோசியத்தையும், படித்து, படித்து அலுத்துப் போய், ஒரு காலகட்டத்தில் சுவாமி போரடிக்கத் தொடங்கி விட்டார். ஆனாலும் அவரது குற்றசாட்டுக்கள் எல்லாமே வெற்றுச் சவடால்கள் என்று ஒரேயடியாகவும் ஒதுக்கி விட முடியாது. ஹெக்டேயின் பதவியிழப்புக்கும், அம்மா போய் பன்னீர் வந்ததற்கும், இன்னும் பல அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனத்துக்கும் காரணமாகிய ஒரே பெயர், சுப்ரமண்ய சுவாமி. அப்படியாகப் பட்ட சுவாமியை என்றைக்காவது சந்தித்தால் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும் என்று யோசித்தது உண்டு. அதற்கான சந்தர்ப்பம் ஒன்று தீபாவளிக்கு முந்தய இரவில் இங்கு வாய்த்தது.

  சென்றவாரம் நண்பரிடமிருந்து ஒரு இமெயில் அழைப்பு வந்தது, செவ்வாய் இரவு சுவாமியுடன் இரவு உணவுடன் கூடிய ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளோம், ஆர்வம் இருப்பின் கலந்து கொள்ளாலம் என்றிருந்தார்.  மில்பிடாஸ் நகரில் உள்ள சரோவர் என்ற இந்திய உணவகத்துக்கு சரியாக 7 மணிக்கு ஆஜராகி இருந்தேன். எனக்கு முன்பாகவே ஒரு பத்து பேர் ஒரு வட்ட மேசையை சுற்றி அமர்ந்திருந்தனர். நடுவில் மூக்குப் பொடி கலரில் கழுத்தை மூடிய கோட்டும், கையில் உ சு வா எம் ஜி யார் அணிந்திருப்பது போல் ஒரு பெரிய வாட்சும், க்ரே கலர் பாண்டும், பளபளக்கும் ஷ¤வுமாக, பளபளவென சுவாமி அமர்ந்திருந்தார். பேச்சு ஒவ்வொருவர் கேள்வி மூலம் உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை  தாவி தாவிச் சென்றது. மனிதர் கொஞ்சமும் அசராமல் பதில்களை அணுகுண்டுகளாக எறிந்து கொண்டிருந்தார். பேச்சினிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் சாப்பிட்டு விட்டுப் பின்னர் பேச்சைத் தொருங்கள் என்று வேண்டுகோள் வைக்க, சூடான உணவு தொடர்ந்த பேச்சினூடே உள்ளே சென்றது. உணவை விட சுவாமி எடுத்து விட்டுக் கொண்டிருந்த தகவல்கள் மிகவும் சூடாக இருந்தன. உணவிற்குப் பின் சுவாமி பற்றிய அறிமுகத்துக்குப் பின், சுவாமி பேசத் தொடங்கினார். சீரான குறையில்லாத ஆங்கில உரை என்ற போதிலும், ஒரு சிறந்த பேச்சாளர் என்று கூற முடியாது. அலங்காரங்கள் இல்லாத அமைதியான தெளிந்த ஆங்கில உரை.  கூட்டத்தில் அவர் எடுத்து விட்ட  முக்கியத்துவம், பார்வையாளர்களை நம்புவதா வேண்டாமா என்று திகைக்க வைத்தன. ஒரு சில இடங்களில் பார்வையாளர்களை தனது சவால்களால் சற்று அதிரவே வைத்தார்.

  கூட்டத்தில் அவர் எழுப்பிய கேள்விகளின் சாரத்தையும், எடுத்து வைத்த ஆதாரங்கள் ஒரு சிலவற்றையும், நானும், கூடியிருந்த பிறரும் அவரிடம் எழுப்பிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமென்றிருக்கின்றேன். சுவாமி நம்பத் தக்கவரா? அவர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் நம்பத் தக்கவையா, அவரது அரசியல் உள்நோக்கம் என்ன என்பதையெல்லாம் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சுவாமியின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டதாயினும், அவர் எழுப்பியுள்ள பல கேள்விகள் இந்தியாவின் இருப்பையே அசைத்துப் பார்க்கக் கூடியவை. அந்தக் கேள்விகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றிற்கெல்லாம் கோர்ட்டிலும், மக்கள் மன்றத்திலும் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சுவாமியின் குற்றசாட்டுக்கள் சிலவற்றில் உண்மை இருந்து அதனால் பல அரசியல்வாதிகள் பதவி இழக்க நேர்ந்ததை நாம் கடந்த கால அரசியலில் கண்டதுண்டு. ஆகவே, சுவாமி சொல்வது எல்லாமே வெறும் வதந்திகள் என்று உதறித் தள்ளி விடவும் முடிவதில்லை. சுவாமி கூறிய குற்றசாட்டுக்கள் ஒன்று புதியவையும் அல்ல. கடந்த சில வருடங்களாகவே அவர் கூறி வருவதுதான் என்றாலும் கூட, இப்பொழுது அவை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக அவர் அறிவிக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயேந்திரர் மீது யாராவது பழி கூறியிருந்தால் நம்பியிருக்கமாட்டோம்,

  சுவாமி, ஜார்ஜ் ·பெர்ணாண்டஸ், உமா பாரதி, பி ஏ சங்மா மற்றும் சந்திரசேகருடன் இணைந்து ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்க இருக்கிறார். இந்தியாவில் அவரது இயக்கமும், கூட்டங்களும் தொடர்ந்து நடக்க இருக்கின்றன. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்: சோனியாவின் உண்மையான முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி, அவரின் குற்றங்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தருவது. அவர் மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார முயலும் முயற்சியினை முற்றிலுமாகத் தவிர்ப்பது. சோனியா யார்? அவரது தகுதிகள் என்ன? அவர் மீது உள்ள குற்றசாட்டுக்கள் என்ன என்பதை மக்களுக்கு கொண்டு செல்வது ஆகியவை அவரது போராட்டத்தின் இலக்குகளாகும். நமது வீட்டிற்கு ஒருவரை குடிவைப்பதாக இருந்தாலே அவரது குலம், கோத்திரம், வருமானம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பின்னரே வீட்டில் குடிபுக அனுமதிக்கிறோம். கல்யானத்திற்கு வரன் பார்க்கும் பொழுது வரனின் ஜாதகம் மட்டுமின்றி அவர்களது பரம்பரையையே அலசி ஆரய்ந்த பின்னரே சம்பந்தம் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நூறு கோடி பேர் வாழும் ஒரு பெரிய நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றவரின் தகுதி, பிறப்பு, சுற்றம், கல்வி, வளர்ந்த சூழ்நிலை, அவரது கடந்தகால வரலாறுகள் என்பது எதுவுமே அறியாமல் ஒப்புவிப்பது முறையா என்பதுதான் சுவாமி எழுப்பும் முக்கிய கேள்வி. இனி அவர் பேச்சின் சாரம்:

  1. சோனியா ஏறக்குறைய பிரதமர் பதவியையை ஏற்பதற்கு தயாராக இருந்த நிலையில் ஜனாதிபதி அப்துல் கலாம் சுவாமியை சந்தித்து, அவ்வாறு சோனியா பிரதமராவதற்கு உரிய சட்ட ரீதியான இடர்பாடுகளை கேட்டு அறிந்துள்ளார். அதன் பின்னரே, குடியரசுத் தலைவரை சந்தித்த சோனியா, தான் பதவி ஏற்கப் போவதில்லை என்று அறிவித்து, தியாகி பட்டம் பெற்று விடுகிறார்.

  2. சோனியா கேம்ப்ரிட்ஜில் பி ஏ படித்ததாகத் தேர்தலின் பொழுது பொய்ப் பிரமாணம் கொடுத்துள்ளார். அது ஒரு கிரிமினல் குற்றம். உண்மையில் அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கவே இல்லை என்பதற்கான ஆதாரம், அந்தப் பல்கலைக் கழகத்தின் பதிலாக வைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சோனியா ஒரு முறை அவ்வாறு தவறாக டைப் செய்யப் பட்டது என்று ஒத்துக் கொண்ட பின்னரும், இம்முறை தெரிந்தே பொய்யான தகவலை தேர்தல் ஆணையத்துக்குச் சமர்ப்பித்தன் மூலம், ஒரு ·ப்ராட் புரிந்துள்ளார். இந்திய மக்கள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதனை அறிந்து மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார்.

  3. சோனியா ராஜீவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ISI மாதிரியான சந்தேகத்துக்கிடமான ஒரு பாகிஸ்தானிய 'சேவை வழங்கும்' நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். என்ன சேவை என்பதெல்லாம் மர்மமான ஒன்று. ராஜீவைத் திருமணம் செய்வதற்கு முன்பிருந்தே, சோனியாவின் பண வரவும் நடவடிக்கைகளும் மர்மமான ரகசியங்களாக உள்ளன.

  4. சோனியாவிற்கு KGB உளவு அமைப்பு இதுவரை 5 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

  5. இந்திய தொல் பொருட்களையும், சிலைகளையும் கடத்திச் சென்று இத்தாலியிலும், ஐரோப்பாவிலும் விற்றுள்ளார். அவருக்கு இத்தாலியில் கணபதி என்ற பெயரில் பழம் பொருள் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடத்தல் தொடர்பான வழக்கு டெல்லி ஹைக் கோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட்டின் உத்தரவின் பெயரில் இன்டர் போல் அமைப்பிலிருந்து சோனியா நடத்தும் இத்தாலியக் கடைகள் குறித்தான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களும் அந்த நிறுவனங்களில் சோனியாவும் அவரது சகோதரிகளுக்கும் பங்கு உள்ள தகவல்கள் உறுதி செய்யப் பட்டுள்ளன. கடத்தல் தொழில் புரிந்த குற்றவாளி சோனியா.

  6. இந்திரா, ராஜீவ், சஞ்சய், டைட்லர், சிந்தியா போன்ற பலரின் சாவிலும் மர்மங்கள் உள்ளன. அவற்றிலெல்லாம் சோனியா குடும்பத்தினரின் பங்கு இருப்பதாகச் சந்திக்கிக்கப் படுகிறது. சோனியாவின் அம்மாவிற்கு விடுதலைப் புலிகளுக்கும் ஹவாலா பண பரிமாற்றத்தின் காரணமாக தொடர்பு இருந்துள்ளது.

  7. சோனியா இன்று வரை தனது இத்தாலியக் குடியுரிமையை உதறவில்லை. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்திய அரசின் முக்கியப் பதவிகள் வகிக்க முடியாது. அதை மறைத்து ஏமாற்றுகிறார். இந்தியாவின் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சட்ட விரோதமாகப் பொய் சொல்லி பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். 

  இது போன்ற குற்றசாட்டுக்களைப் பட்டியலிட்ட சுவாமி, பல்வேறு கேள்விகளுக்குப் பதில் வழங்கினார். குற்றசாட்டுக்களுக்கு அவர் அளித்த ஆதாரங்கள் குறித்தும், நானும் பிறரும் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் அளித்த பதில்களையும் அடுத்த வாரம் காணலாம்.

  (தொடரும்...)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |