டிசம்பர் 08 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : ஓரெழுத்து மாறினால்
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
| Printable version | URL |

'கதவைத் திறடி திருடி' என்ற திரைப்படத்திற்கு நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உதவி இயக்குனர் ஒருவருக்கு வருகிறது. நடிகர் தேர்விற்கு கனவுகளுடன் வரும் ஒருவருடன் சுவையான உரையாடல்.

'சார், தணக்கம்'

'தணக்கமா?'

'ஆமாம் சார், எனக்குத் தணக்கம்கிற தார்த்தைக்குப் பதில் தணக்கம்கிற தார்த்தை தான் தரும். அதாதது 'த'ங்கிற எழுத்து எனக்குத் தராது'

'இதென்ன சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு, சரி,உன் பேரென்ன?'

'தரதராசனுங்க'

'என்னப்பா? இந்த காலத்துலே இப்படி கூடப் பேரு வைப்பாங்களா?'

'ஆமாம் ஆமாம், தைப்பாங்க தான்'

'என்னது தைப்பாங்க, உதைப்பாங்கனுட்டு, சரி உங்க சொந்த ஊரு?'

'நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு, முகதரி தேதையில்லே'

'ம்க்கும், இதுலே ஒன்னும் குறைச்சல் இல்லே. ஊரைச் சொல்லுய்யா, அனேகமா உன் குசும்பைப் பார்த்தா ஊரு கோயம்புத்தூரா இருக்கும்னு நினைக்கிறேன்'

'இல்லைங்க, தத்தலக்குண்டு'

'என்னய்யா குண்டு போடறே? கண்டக்டர்கிட்டே இப்படி சொன்னா அப்படி ஒரு ஊரே இல்லேனு உன்னை பாதி வழியிலே இறக்கி விட்டுறப் போறார். சரி,என்னவோ போ, ஏதாச்சும் நடிச்சு காட்டுறியா?'

'நான் சிதாஜி தசனம் பேசி நடிப்பேங்க'

'சிதாஜியா? தசனமா?'

'அதான் நம்ம சிதாஜி'

ஓ நடிகர்திலகம் சிவாஜியா? நேரம் தான்'

'சரி பண்ணு'

'தானம் பொழிகிறது,பூமி திளைகிறது, உனக்கேன் தர தேண்டும், தரி, தரி, தரி'

'சரி,சரி, சரி, ஏம்பா,வானம், விளைதல்,வரி இதெல்லாம் எவ்வளவு இனிமையான வார்த்தைகள் அந்த தசனத்தோட, சீ வசனத்தோட சிறப்பே அந்த வார்த்தைகள் தான், உன் வாயிலேர்ந்து இதெல்லாம் கேக்கணுங்கிறது என் தலையெழுத்து,சரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும் ஏன் விட்டு வைக்கணும், அவர் வசனமோ பாட்டோ,அதையாச்சும் ஒழுங்காப் பாடு'

'தாங்கைய்யா தாத்தியாரைய்யா, தரதேற்க தந்தோமய்யா'

'தரை தேச்சு கழுவ வந்தியா? என்ன அழகான பாட்டை இப்படிக் கொல்லுறே? ஹையோ ஹையோ'

'அடுத்து யாரு சூப்பர் ஸ்டாரா?'

'எப்படி சார் கண்டுபிடிச்சேங்க?'

'ஹப்பா, இப்போ தான்யா ஒரு வாக்கியம் ஒழுங்கா பேசியிருக்கே, சரி, பாடு, பேசு, என்னவேணாலும் பண்ணு'

'அந்தாக்ஷரி மாதிரி பாடதேன்.

தா தான் பக்கம் தா, பக்கம் தர தெக்கமா? தா
தா தா தா கண்ணா தா
இரு திழியின் தழியே நீயா தந்து போனது? இனி திடியும் தரையில் தூக்கம் என்னதாதது?'

'ஸ்டாப், உன் அந்தாக்ஷரியை நிறுத்து. போதும் உன்னைப் பத்தி சொல்லு, கேட்போம். வத்தலக்குண்டு ஊரு, இங்கே யாரையாச்சும் தெரியுமா?'

'இங்கே என் நண்பன் தீட்டுக்குத் தந்திருக்கேங்க'

'தீட்டுக்கா? ஓ பாவம், இறந்துட்டாரா? பத்தாம் நாள் தீட்டுக்கு வந்திருக்கியா?'

'தீட்டுக்குங்க, தீட்டுக்கு'

'ஓ உன் பாஷையிலே வீட்டுக்கு வந்திருக்கே, தெளிவா குழப்பறேயா, சரி, நீ இப்போ கிளம்பு, உன் அட்ரஸ் கொடுத்துட்டு போ, காமெடியன் வேஷத்துக்கு ஆள் எடுக்கும் போது கண்டிப்பா உன்னை சிபாரிசு பண்றேன். சரியா? இப்போ கிளம்பு'

'சார், இந்த திலாசம் எங்கே இருக்குனு சொன்னா, நான் போயிடுதேன்'

'இந்த திலாசமா? இங்கே வா, நேரே வாசலுக்கு உன் பாஷையிலே தாசலுக்குப் போ, அங்கேர்ந்து இடது பக்க ஓரமா 4 தெரு இருக்கும், அதுலே ஒண்ணாவது தெருவே விட்டுடு, ரெண்டாவது தெருவை விட்டுடு, மூணாவதையும் விட்டுடு. 4 வது தெருவுக்குப் போ, அங்கே 4 வீடு இருக்கும், வழக்கம் போல் ஒன்னு, ரெண்டு, மூணையும் விட்டுடு, 4வது வீட்டுக்குப் போ. அங்கே வீட்டுக்குள்ளே நுழைஞ்சா 4 ரூம் இருக்கும், அதுலேயும் ஒன்னு, ரெண்டு, மூணு விட்டுடு, 4வதுக்கு போ, அங்கே அலமாரி இருக்கும், அதுலே 4வது ராக் இருக்கும், அதுலே, உன் பாஷையில் தள்ளுதர் இயற்றிய திருக்குறள் இருக்கும், அது மேல சத்தியமா இந்த அட்ரஸ் எங்கே இருக்குனு தெரியாது.

'பரதால்லேங்க, அப்போ நானே கண்டுபிடிச்சுப் போயிட்டு தர்றேன்'

'போயிட்டு என்னய்யா தருவே'

'போயிட்டு தர்றேன்னா போயிட்டு தர்றேன்'

'ஓஹோ, சரி, போயிட்டு தா'

'தணக்கங்க'

'தணக்கம்'

உதவி இயக்குனர் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருக்கும் வேளையில் அடுத்து தேர்விற்கு வந்த ஒருவர் வருகிறார்.

'வணக்கம் சார்'

'வணக்கம்'(இவரைப் பார்த்தவுடன் உதவி இயக்குனர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி),உனக்கு இந்த வணக்கம் தணக்கம் எந்தப் பிரச்சினையும் கிடையாதுல்லே.

'இல்லையே'

'குட், உன் பேரு என்னப்பா'

'வால்ராஜ் சார்'

'அப்போ உன்னை எல்லாரும் செல்லமா வாலுனு கூப்பிடுவாங்களோ, சின்ன வயசுலே ரொம்ப சேட்டை பண்ணியிருப்பே போல, அதான் இப்படி பேரு,

'உங்க ஊர்?'

'வாவனாசம்'

'அப்படி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே, சரி, எனக்கு சிவாஜி பாடல்கள் ரொம்ப பிடிக்கும், ஸோ ஒன்னு சந்தோஷமாவும் இன்னொன்னு சோகமாவும் பாடி நடிச்சுக் காட்டு, பார்க்கட்டும்'

'வாலிருக்கும் ம் ஹ¤ம்,
வழமிருக்கும் ம் ஹ¤ம்,
வசி இருக்காது,
வஞ்சணையில் காற்று வரும்,
தூக்கம் வராது'

'வாலும் வழமும் கைகளில் ஏந்தி வவள வாயில் வுன்னகை சிந்தி.....'

'ஸ்டாப் இட். உனக்கு 'ப'ங்கிற் எழுத்துக்குப் பதில் 'வ'ங்கிற எழுத்து தான் வரும். கரெக்டா? ஏன்யா, எத்தனை பேருய்யா கிளம்பி வந்துருக்கேங்க?'

'என்னோடு சேர்த்து வத்து பேர்'

'பத்து பேரா? வாயைக் கொடுத்து மானமே போச்சு. ஏன் என்னனு கேக்காம தயவுசெய்து என் பி.கேகிட்ட உன் அட்ரஸ் கொடுத்துட்டு அப்பீல் ஆகிக்கோ. பிளீஸ்'

வந்தவர் செல்ல, உதவி இயக்குனருக்குத் தொலைபேசி அழைப்பு வர,

'தணக்கம். நான் தான் வாலு பேசறேன். இல்லை, வாலுசுப்ரமண்யம் பேசறேன். இருங்க. எனக்குத் தலை சுத்துது நான் அப்புறம் பேசறேன். இந்தாப்பா ரமேஷ், கொஞ்சம் டீ சொல்லுப்பு. அப்படியே மீதி இருக்கிற ஆட்களை ஒரு வாரம் கழிச்சு வரச்சொல்லு'

உள்ளே நுழைந்த புது உதவியாளர்,'வரி' என்று சொல்ல,'நீயுமா? இன்னைக்கு யார் முகத்துலே முழிச்சேனோ?'என்று தனக்குத்தானே புலம்பியபடி மேஜையில் படுக்கிறார்.

oooOooo
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |