Tamiloviam
டிசம்பர் 11 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : இறந்தும் வாழ்வர்!!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]
  Printable version | URL |

 

ஊழலிலும் இலஞ்சத்திலும்
எவரெஸ்ட்டாய் விளங்கும்
மும்பையின் காவல்துறையில்
நேர்மை துணிவு கடமையுணர்வில்
இமயமாய் இருந்தவர்
ஹேமந்த் கர்காரே!

'மாலேகான்வ்' குண்டுவெடிப்பில்
புதைந்து கிடந்த
மர்மங்களையும் உண்மைகளையும்
கண்டுபிடித்து உண்மை குற்றவாளிகளை
உலகுக்குக் கட்டியதால் மதவாத சக்திகளின்
பகைக்கு ஆளானவர்!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதால்
இன்று நம்மிடையே இல்லாதவர்!
சத்தியத்துக்கு என்றுமே சோதனைதான்!
மஹாத்மாவையே விட்டுவைக்காத மாபாவிகள்
கர்காரே அம்தே சலாஸ்கர் என
முத்தாய் மூன்று அதிகாரிகளை
கொத்தாய்க் கொன்றுவிட்டனர்!

அத்துடன் விடவில்லை
உடனிருந்த இதர காவலர்களையும்
அப்பாவி பொதுமக்களில்
இருநூறுக்கும் மேற்பட்டோரையும் கொன்றும்
முன்னூறுக்கும் மிகையோரைக் காயப்படுத்தியும்
தம்வெறியைத் தணித்திருக்கின்றார்
கொடூரர்கள்!

உயிர் நீத்த அனைவருமே இன்று
இந்தியக் கண்டம் முழுதும்
நினைவு கூறப்படுகின்றர்!
மரியாதை செலுத்தப் படுகின்றர்!
உலகம் இருக்கும் மட்டிலும்
வரலாற்றில் நிலைத்திருப்பர்!

இவர்களைக் கொன்ற பாதகரோ
'கயவர்கள் கோழைகள் எட்டப்பர்கள்
சமுதாயத்தின் சாக்கடைக்கழிவுகள்' என
இனி என்றென்றும்
இழிக்கப்படுவர் தூற்றப்படுவர்
சபிக்கப்படுவர் !!

oooOooo
                         
 
கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |