Tamiloviam
டிசம்பர் 11 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : La Belle Dame Sans Merci..!! - (இறுதி பாகம்)
- செந்தில் குமார் [crashonsen@gmail.com]
  Printable version | URL |

பாகம் -  1  |  பாகம் -  2 | பாகம் - 3

சமீப காலமாக, ஆஹா FM கேட்பதிலிருந்து மாறி, வெறும் தெலுங்கு பாடல்களா பாலு கேட்டுக்கொண்டிருந்தான்.
சனிக்கிழமை பிற்பகல்.வினய் பற்றிய சோகம் அலுவகத்தில் மறக்கப் பட்டிருந்து.

"எப்படிடா வினய்-வோட  கேர்ள்பிரண்ட் சுதா-வ தெரியும்"

"வினய் புதுசா சேர்ந்ததால, அவனோட இன்கமிங்,அவுட்கோயிங் மெயில செக்குரிட்டிக்காக கொஞ்சம் படிக்கவேண்டியதா இருந்தது, சுதா-னு சொல்லிட்டு ஒரு பொண்ணுகிட்ட இருந்து மெயில், அதும் நம்ப காம்பிடிங் கம்பனில வேலை பண்றா,ஆனா நோ டிரான்ஸ்பர் ஆப் கான்பிடன்ஷியல் இன்போ,பட் "யூ ஆர் மாஸ்குலைன்,ஐ வாண்ட் யூ",மாதிரி நிறைய மெசெஜஸ்"-னு சொல்லிட்டு ஐந்தாவது முறையாக ஏதோ "நுவு நுவு"-னு தெலுங்கு பாட்டு பாடினான்.

"என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கிற"

"பாஸ்,சந்தியாவுக்கு இன்னைக்கு பர்த்டே,காலைல தான் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி, விஷ் பண்ணேன்"

"எப்படிடா கண்டுபிடிச்சே உண்மையான பர்த்டே-ய"

"மெதொடிகல் அப்ரோச் பாஸ், சந்தியாவோட உண்மையான பர்த்டே யாருக்கு தெரியும்"

"ம்ம்ம்..அவ அப்பா, அம்மா,கூட பிறந்தவங்க,இல்லனா அவ பிரண்ட்ஸ்"

"சரி,அவ விட்டுக்கு கால் பண்ணி, அவளோட தம்பி கிட்ட, நாங்க ICICI-ல இருந்து கால் பண்றோம், வெரிபிகேஷனுக்காக,உங்க அக்காவோட  உண்மையான  டேட் ஆப் பர்த் சொல்லுங்கனு கேட்டேன், பையன் அப்பாவி பாஸ், அம்மா கிட்ட கேட்டு, கரெக்ட்டா சொல்லிட்டான்"

"வீட்டு போன்  நெம்பர் தான்  டேடாபேஸ்ல இருக்காதே, எப்படி கிடைச்சுது"

"அது சிம்பிள் பாஸ்,சந்தியாவ பாலோ பண்ணி அவ வீட்டு அட்ரெஸ கண்டுபிடிச்சேன், அப்புறம் karnataka.bsnl.co.in-ல அட்ரெஸ குடுத்தேன், அவ அப்பா பெயர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற வீட்டு நெம்பர கரெக்ட்டா குடுத்துடிச்சு,பிஎஸ்என்எல்  வாழ்க"

"நீ திருந்த மாட்டடா, எப்ப உனக்கு  ட்ரிட் தர போறா"

"இன்னைக்கு ஈவினிங்"

அப்ப தான் பாலு போன் சிணுங்கியது.

பேசிவிட்டு சொன்னான்.

"பாஸ், நஞ்சுண்டப்பா வரார்.வினய் மர்டர் கேஸ் சால்வ் ஆயிடுச்சாம்"

"என்னது?"

நஞ்சுண்டப்பா வந்தவுடன் நாங்களும் கார் பார்க்கிங் சென்றோம்.

"என்ன சார், சுதா எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாளா"

"சுதா இல்ல பாலு,ப்ரீத்தியையும்,அவ காதலன்  நவீனையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்,முதல்ல சந்தேகத்துல தான் அரெஸ்ட் பண்ணோம், அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டாங்க"

"என்ன சார் சொல்றீங்க,ப்ரீத்திக்கு காதலனா,எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ரிலாக்ஸ்"-என்றவர் தொடர்ந்தார்," ரிங் ரோட்ல இது நடந்து இருக்கு,மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல, ஏன்னா வந்து அடிச்சவங்க எதுவும் திருடல,ப்ரீத்தியும், வினய்-யும் அந்த இடத்துக்கு இரவு 7:45க்கு வந்து இருக்காங்க, நவினும் அவன் பிரண்ட்ஸும் வந்து அடிச்சது, சம்வேர் பிட்வீன் 8:00 அண்ட் 8:30"

"நவீன எப்படி புடிச்சீங்க,கதைல அவன் எங்க வந்தான்"

"கதைல அவன் ஆரம்பத்துல இருந்தே இருக்கான், அவன் தான் எல்லாத்தையும் பிளான் பண்ணியது, நவீனும், ப்ரீத்தியும் காதலிக்கறது ப்ரீத்தி வீட்ல பிடிக்கல,ஸோ சொந்தகார பையன் வினய்-யை ப்ரீத்திக்கு நிச்சயித்துயிருக்காங்க, வினய்-கும் இந்த காதல் நல்லா தெரியும், ஆனா ப்ரீத்தி மேல வினய்-க்கு மோகம்ககிறதால, இவனும் ரொம்ப ஆசைபட்டுயிருக்கான்,அதுக்கப்புறம் வினய்  ப்ரீத்தியை ரொம்ப தொந்தரவு பண்ணியிருக்கான்.."

"அதுக்காக கொலை பண்றதா"

"இல்ல,சும்மா கொஞ்சம் தட்டி மிரட்டுலாம்னு தான் இவங்க பிளான்,அதனால தான் ப்ரீத்தி வினய்-யை அங்க கூட்டிட்டு வந்திருக்கா,ஆனா அது விபரீதமாகி,ஹெட் இன்ச்சூரிஸ்-ல  வினய் செத்து போய்ட்டான்"

"சரி, நவீன எப்படி சந்தேகப்பட்டீங்க"

"Modus operandi, மெதொடிகல் அப்ரோச்,பொதுவா உலகத்துல நடக்குற இந்த மாதிரி க்ரைம்க்கு  காரணம் ஒண்ணு  பணம்,காதல், இல்லனா பழிவாங்கல். இதற்கு மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல.ஸோ காதல்/பழிவாங்கல். போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டும் 8:00 - 9:00-குள்ள நடந்திருக்குன்னு சொல்லுது. ஸோ, சம்பவம் நடந்தன்னைக்கு  ஈஜிபுரா சிக்னல், அப்புறம் சோனி வோர்ல்ட் சிக்னல்ல டிராபிக் ரூல்ஸ் வயலேஷன்ஸ்/லைசன்ஸ்க்காக 7:45 இருந்து 9:00 வரை

சார்ஜ் ஷீட் பண்ண டூ வீலர்,போர் வீலர் எல்லாரையும் சார்ஜ் ஷீட்ல இருந்த அட்ரேஸ வெச்சி தேடி கண்டுபிடிச்சி விசாரிச்சோம்"

"அப்புறம்.."

"இரண்டு மூனு பேர், அந்த 8 - 8:30  நேரத்துல அந்த ப்ரிட்ஜ் பக்கம், ஒரு போர்ட் எண்டீவர பார்த்திருக்காங்க, ஆனா மறுபடியும்  இரண்டாவது முறையா ப்ரீத்திய விசாரிச்சதுல அவ அடிச்சவங்க டூ வீலர்ல வந்தாங்கன்னு சொன்னா, அப்பவே அவ மேல கொஞ்சம் சந்தேகம்.அப்புறம் திங்ஸ் ஆர் இஸி.. அவளோட மொபைல் போன் கான்வர்ஷேஷன்ஸ்,சிட்டில போர்ட் எண்டீவர் வெச்சியிருக்கவங்க ரொம்ப கம்மி,அவங்கள விசாரிச்சோம்,அதுல ஒருத்தன் இந்த நவீனோட ப்ரண்ட்.ஸோ....ஒன் ப்ள்ஸ் ஓன் இஸ் டூ..அப்புறம் இந்த நவீனையும்,ப்ரீத்தியையும் தனியே கொஞ்ச நேரம் விசாரிச்சோம், ரொம்ப நேரம் தாங்கல,சொல்லிட்டாங்க"

"அப்ப ஹாஸ்பிடல்ல அழுதது எல்லாம் நீலிக் கண்ணீரா"

"இல்ல அவ அழுதது உண்மை, ஆனா அழுதது வினய்-க்காக இல்ல இந்த நவீனுக்காக.."

"அடிப்பாவி.."

"சரி நான் கிளம்புறேன்..."

"எங்க சார், கோரமங்களா பக்கமா"

"ஆமா.."

" நான் வண்டி கொண்டுவரல,போரம்ல டிராப் பண்ணிடுங்க, ஒரு டிரிட் இருக்கு"

"யாரு பாலு.."-இது நஞ்சுண்டப்பா

பாலு கண் சிமிட்டினான்.

" நீ திருந்த மாட்டடா..."

(முற்றும்)

oooOooo
                         
 
செந்தில் குமார் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |