|
இதை எழுதியது அருட்பெருங்கோ (http://arutperungo.blogspot.com/)
என்னுடைய எல்லாக் கவிதைகளும் திருடப்பட்டவைதாம்! உன்னிலிருந்து…
கொட்ட வேண்டியத் தலையைக் கோதிவிடுகிறாய். முத்தமிடும் கன்னத்தைக் கிள்ளி வைக்கிறாய். நீ மெல்லினமா? வல்லினமா?
ஒரே ஒரு கவிதை சொல்வதற்கு ஒரு விழா நடக்குமா ? நடந்ததே! உன் பெயர் சூட்டு விழா !
என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ஆயிரம் பூக்களும் உன் வீட்டுக் கண்ணாடியில் பூக்கும் ஒற்றைப் பூவுக்கு ஈடாகுமா?
“முத்தம் வேண்டுமா?” - சொற்சுவை. “இச்” – “பொருட்”சுவை. உன்னைப்போல, உன் உதடும் கவிதைதான்!
குளிக்கும் முன் ஆடைகளைக் களைகிறாய். அழகை?
நீ குளிக்கப் போகிறாய். குளித்துத் தயாராகிறது, சோப்பு!
நீ குளிக்கிறாயா? உன்னில் நனைந்து நீர் குளிக்கிறதா?
காய்ச்சல் வந்து நீ குளிக்காத நாளில் தண்ணீருக்குக் காய்ச்சல்!
கொதிக்கும்போதும் தண்ணீர் சிரிக்கிறது. உன் குளியலுக்கு வெந்நீராவதென்றால் சும்மாவா?
எனக்கு அருவியில் நனைவது பிடிக்கும். உன் ஈரக் கூந்தலை என் மேல் துவட்டு !
|