Tamiloviam
டிசம்பர் 20 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : நா காக்க!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]
| | Printable version | URL |

Food

'அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சு'
'அளவோடு இருந்தால்
வளமோடு வாழலாம்'
நோயற்ற வாழ்வே
குறையற்ற செல்வம்'
போன்ற பொன்மொழிகளை
நினைவு கொள்ளாததால்
இன்று
முப்பது நாற்பதுகளில்
இருப்போரெல்லாம்
மருத்துவமனைகளின்
தொடர் வாசத்தில்!

சர்க்கரை
இரத்த அழுத்தம்
உடற் பருமன்
நெஞ்சு வலி
கழுத்து வலி
முதுகு வலி
மூட்டு வலி
உடற் சோர்வு
நரம்புத் தளர்ச்சியென
நீண்டு கொண்டே போகும்
உடலியல் பிரச்சினைகள்!

காரணம் யாதென
ஆராய்ந்து பார்ப்பின்
உணவுக் கட்டுப்பாடும்
உடற் பயிற்சியின்மையுமே!
'யாகாவாராயினும்
நாகாக்க' என
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே
சொல்லி வைத்தார்
பொய்யா மொழிப் புலவர்!
நாமும் நினைவில் கொள்வோம்
அவர் 'நாகாக்க' சொன்னது
சொல்லில் மட்டுமல்ல
சுவையிலும் தான் !!

oooOooo
                         
 
கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
உங்கள் கருத்து  
Girijamanaalan
12/19/2007 , 7:53:41 PM

 [Comment url]
கவிதைகள் பகுதிக்கான படைப்பு
-----------------------------
நிற்க அதற்குத் தக...
======================
முதுகலைகளே
முணுமுணுத்துக் காத்திருக்க
இளங்கலைப் பட்டதாரி எனக்கு
எங்கே கிட்டும்
வேலை வாய்ப்பு?
நிற்கிறேன் நானும்
நீண்டதோர் வரிசையில்
'நிற்க அதற்குத் தக" என்ற
நேய வள்ளுவன் சொல்லை
நெஞ்சில் வைத்து.

- கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி, தமிழகம்.





நிற்க அதற்குத் தக
நேய வள்ளுவனின்
   
கவிஞர் மதுராப்புர கலைமகன் பைரூஸ்
12/24/2007 , 4:42:31 PM

 [Comment url]
கவிஞர் மதுராப்புர கலைமகன் பைரூஸ்
வாழிய நின் தமிழ்ப்பணி!
எனக்கே உரித்தான பாக்களை
பவனிவரச் செய்வது எவ்வாறு?
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |