|

அம்மா மரியா! பெற்றால்தான நீ அன்னையா? பாலருந்த உற்றால்தான நீ அன்னையா? அதுவும் இல்லை இதுவும் இல்லை எங்கள் வாழ்வில் உன்னையன்றி எதுவுமில்லை உன் அன்பொன்றே பொதுவில் எல்லை அழுதால் தருவாய் தொழுதால் வருவாய் விழுதாய்த் தொடர்வாய் - துயராம் பழுதைத் துடைப்பாய் உணர்வாய், உயிராய், எமதாய், நிறைவாய் குணமாய்க் குலமாய்ப் பெரிதாய் வழியாய்த் தொடர்வாய் தோளில் சிலுவை சுமந்தான் தாயே! சுமந்த வாழ்வைச் சுமந்தே வருந்தும் எனக்கும் தாயே.
|