டிசம்பர் 22 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : சிலந்தி
- TKB காந்தி [gandhi@jhmi.edu]
| Printable version | URL |

அவள் குரலில் மயக்கப்பட்ட தொணிந்த தோரணை, அவன் மீது
குழைவில் சதம் பெண்மை கூட்டியிருந்தாள்
அன்றைய அவன் - அவள் வாக்கியங்களுக்காகவும்,
அந்த காட்சிக்காகவும்
என் புலன்கள் அவமானப்பட்டு
ஓர் மயிர் இழையில் என் மூளை
தற்கொலை செய்திருந்தது.

அன்று தான் என் முதல் நிர்வாணம்
துன்பம் கூட்டப்பட்ட ரணம்,
நிராகரிக்கப்பட்ட காயத்தில்
ஏளனக் கத்தியை குத்தியிருந்தாள் - அவள் பார்வையில்
அவள் பிம்பம் படிந்த இதயத்திற்காய்
மன்னிக்கப்படவேண்டி கீழே விழுந்திருந்தது என் நிழல்.

உணர்ச்சி மருத்து, வலை சிதறிய சிலந்தியாய்
என் வீட்டுக் கண்ணாடி முன் நான்.

தொலைந்த லட்சியம் தொடர
சிலந்தியின் எச்சிலாய் என் நம்பிக்கை மட்டும்...

 

oooOooo
TKB காந்தி அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |