அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் உதவப்போவதில்லை. எனவே ஒட்டுமொத்த இந்து சமுதாயமே இந்தப் பணியை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் ராம்ஜென்மபூமி நியாஸ் தலைவர் கோபால்தாஸ். ராம்ஜென்ம பூமி விவகாரத்தில் இனி அரசியல் கட்சிகளை நம்பக்கூடாது என்று லேட்டாக புரிந்துகொண்டாலும் இப்பொழுதுதாவது தெரிந்துகெ¡ண்டார்களே!! இதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இந்தக் கட்சி என்றில்லாமல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அனைத்துக் கட்சிகளுக்கும் நிலுவையில் இருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதன் மூலம் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் ஆதாயம் தேடுவது ஒன்றுதான் குறி. மற்றபடி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணமோ, பிரச்சனையைப் பெரிதாக்குவதால் ஏற்படப்போகும் விளைவுகளோ கொஞ்சமும் அக்கறை கிடையாது.
தமிழுக்காகவே வாழ்வதைப் போன்று காட்டிக்கொள்ளும் ஒரு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரைக் குற்றம் சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மற்றொரு தலைவர் தேவையில்லாத ஒரு பிரச்சனையைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார். இதைப் பே¡ன்றே மற்றொரு தலைவர் சினிமாவில் எத்தனையோ ஆபாசங்களும் வன்முறைகளும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சில குறிப்பிட்ட நடிகர்கள் நடிக்கும் படங்களைக் குறி வைத்துத் தாக்கி, ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். கேட்டால் தமிழுக்காவே நான் வாழ்கிறேன் என்று சுயதம்பட்டம். சினிமாவில் வரும் ஆபாசக்காட்சிகளையும் வன்முறைகளையும் களையெடுக்க வேண்டும் என்ற இவரது நோக்கம் உண்மையானது என்றால் அனைத்துச் சினிமாக்களையும் குறிவைக்க வேண்டுமல்லவா இவரது விமர்சனம். அதை விட்டுவிட்டு பெரிய நடிகர்கள் - குறிப்பாக யாருடன் மோதினால் தனக்கும் தன் கட்சிக்கும் பத்திரிக்கை செய்திகளில் முதலிடம் கிடைக்குமோ அவர்களை மட்டும் தாக்கிவருகிறார்.
ராம்ஜென்மபூமி விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மதத்தலைவர்கள் ஒன்றுகூடி அமைதியாகப் பேசியிருந்தால் பிரச்சனை இவ்வளவு தூரம் வளர்ந்தே இருக்காது. இந்தியாவின் சரித்திரத்தில் இந்நிகழ்ச்சி ஒரு கறையாக படிந்தும் இருக்காது. இந்தப் பிரச்சனை என்றில்லை. நாட்டில் தோன்றும் இதைப் போன்ற பல பிரச்சனைகளுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாகப் பேசிக்கொண்டால் எதுவும் பெரிய அளவில் மோதல்களாகவோ, போராட்டங்களாகவோ வெடிக்காது. மாறாக அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்படும். இதைவிட்டுவிட்டு பிரச்சனையைத் தீர்க்க அரசியல் கட்சித் தலைவர்களது தயவை நாடினாலோ அல்லது அவர்களை பிரச்சனைகளில் நுழையவிட்டாலோ பின்விளைவுகள் ரணகளமாகவே இருக்கும்.
|