டிசம்பர் 23 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கட்டுரை
கட்டுரை
சமையல்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : பொய் சொல்ல மனசுக்கு பிடிப்பதில்லை!
  - ராமசந்திரன் உஷா
  | Printable version |

  சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு கண்ணில் பட்டது. பெண்கள் எதற்கு அதிகம் பொய் சொல்லுகிறார்கள் என்று! நண்பிகள் புதியதாய் அணிந்த உடை நன்றாக இருக்கிறதா என்றுக் கேட்டால், நன்றாக இல்லை என்றாலும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று பொருத்தமாய் இருக்கிறது என்று மனமறிந்து பொய் சொல்லுகிறோம் என்று பெரும்பாலோர் மன வருத்ததுடன் பதில் சொன்னார்கள். இது பெண்களுக்கே உண்டான பிரத்தியோக குணம் என்றும் சொல்லலாம். ஒன்று புதியதாய் அணிந்தால், வாங்கினால் முதலில் நாலுபேருக்குக் காட்டி நன்றாக இருக்கிறது என்று நற்சான்றிதழ் வாங்க துடிப்பார்கள்.

  பெண்கள் என்று பொதுவாய் குற்றம் சாட்ட முடியாது. நம் கமலஹாசன் படம் பிடித்ததும் ஊருக்கு எல்லாம் போட்டு காட்டுவார். எல்லாரும் பார்த்துவிட்டு, ஆஹா! ஓஹோ! என்று சொல்லுவார்கள். ஆனால் படம் ? வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டுவிட்டு நன்றாக இருக்கிறதா என்றுக் கேட்டால், எப்படி இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்றுதானே சொல்லி வைக்க முடியும்!

  இதைவிட இன்னொருவகை வில்லங்கமான பிரகஸ்பதிகள் பள்ளி, கல்லூரில்  இருப்பார்கள், அவர்களிடம் சில அப்பாவிகள்  அபிப்ராயம் கேட்டால், ஆஹா! சூப்பராய் இருக்கு என்றுச் சொல்லிவிட்டு, பின்னால் சொல்லி சிரிப்பார்கள். தவறான ஆலோசனையும், மிகவும் நல்ல தொனியில் சொல்லப்படும். இன்னொரு சாரார், உண்மையில் உடை நமக்கு பொருந்தி பார்க்கவும் நன்றாக இருந்தால், அவர்கள் கண்ணில் விழுந்ததும் ஒரு விநாடி கண்ணில் பொறாமை தீ எரியும். ஆனால் உடனே அதை மாற்றிக் கொண்டு, இந்த உடை உனக்கு பொருந்தவேயில்லை என்று உரிமையுடன் கடித்துக் கொள்வார்கள்.

  இதைவிட வேடிக்கையான பழக்கம் பொதுவாய் ஹிந்திக்காரர்களிடம் காணப்படும். அதாவது ஒருவர் (தி) நம் அருகில் வந்து, நீங்கள் இன்று மிக அழகாய் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் புடைவையோ அல்லது ஏதோ ஒன்று மிக அழகாய் இருக்கிறது என்றால் என்ன பொருள் தெரியுமா? நன்றி என்றுச் சொல்லிவிட்டு நீங்கள் பேசாமல் போய்விடக்கூடாது. நீங்கள் மட்டும் என்ன இந்த வயதில் எப்படி சிக் என்று இருக்கிறீர்கள், பாருங்கள் தூரத்திலேயே பார்த்தேன் இந்த புடைவை மிக மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லி வைக்க வேண்டும். முதலில் நமக்கு நன்றாய் இருப்பதாய் ஆரம்பித்தாரே அதற்கு இதுதான் பொருள்!

  உடனே அவர் அந்த புடைவை அல்லது நகை, கைப்பை போன்ற வஸ்துகளை எங்கு வாங்கியது அல்லது சமீபத்தில் போன வெளிநாடு பயணத்தில் வாங்கியது அல்லது கணவருக்கு கிடைத்த பிரமோஷனில் அடிக்கடி வெளிநாடு போவது அல்லது தங்கை லண்டனில் இருக்கும் விஷயம் போன்றவை விலாவாரியாய் சொல்லப்படும்.

  நம்மைப் புகழ்ந்தப் பொழுது வெறுமே நன்றி சொல்லிவிட்டு பேசாமல் இருந்துவிட்டால், அவர் தன்னுடைய நண்பிகள் பட்டியலில் இருந்து நம்ம்மை நீக்கியும் விடுவார். பிறகு உங்கள் ஆணவத்தைப் பற்றி கதைகள் உலா வரத் தொடங்கும். அதனால் அவருடைய ஒரிஜினல் முதலை தோல் கைப் பையைப் பற்றிக் கேட்டு விட்டால், ஆதியில் இருந்து நீங்கள் கூகுளிலோ, என் சைக்கிளோ பீடியாவிலோ தேடினாலும் கூட இருக்காத விஷயங்களை சொல்ல ஆரம்பிப்பார். நாமும் ஒரு வகையான தியான பயிற்சியில் ஈடுப்பட இத்தகைய பேச்சுக்கள் உதவும். ஆனால் கண்களை திறந்து வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் தலையையும் அவ்வப் பொழுது ஆட்ட வேண்டும். காதை மூடும் கலையையும் பயின்று இருந்தால் நலமே! ஆனால் பழிக்கு பழிவாங்க நினைத்து நீங்களும் உங்கள் சுயபுராணத்தை ஆரம்பிக்க நினைத்து வாயை திறக்க எத்தனைக்கும்பொழுது, ஏக் மினிட் என்றுச் சொல்லி மாயமாய் மறைந்துவிடுவார்கள். எவ்வளவு முன் அனுபவம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்ற உண்மை அப்பொழுது உங்களுக்கு புலனாகும்.

  ஆரம்பத்தில் நானும் யாராவது போட்டுக் கொண்ட உடை நன்றாக இருக்கிறதா அதாவது பொருத்தமாய் இருக்கிறதா என்றால் நன்றாக இருக்கிறது என்றுச் சொல்லிவிடுவேன். பிறகு, ஏன் உண்மையை சொல்லகூடாது என்று ( அதுதானே பிரச்சனை?) , உண்மையில் பொருத்தமாய் இல்லாவிட்டால், எல்லா உடைகளும், நிறங்களும் எல்லாருக்கும் பொறுந்தாது- உண்மையைச் சொல்லிவிடுவேன். பிறகு என்னவாயிற்று தெரியுமா? யாருமே என்னிடம் அபிப்ராயமே கேட்பதில்லை. அப்படியும் சிலர் கேட்டால் மய்யமாய் ( வார்த்தை உதவி- எழுத்தாளர் சுஜாதா) தலையை ஆட்டிவிடுவது. அது சரி, என்னைப் பற்றி கேக்குறீங்களா, எதிர்ல ஒரு பெண் வந்தால், அவங்க முகத்தைக் கண்ணைப் பார்த்தால், எல்லாமே விளங்கிடுங்க!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |