சோயா வெஜிடபிள் இட்லி தேவையான பொருட்கள்
சோயாமாவு - 2கப் ரவை - 2 கப் தயிர் - 1/2 கப் பீன்ஸ் பொடியாக நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன் கேரட் துருவியது - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயக்கீரை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாகநறுக்கியது) கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாகநறுக்கியது) தக்காளி - பொடியாக அரிந்தது உப்பு - தேவைகேற்ப இஞ்சிவிழுது - 1/2 டீஸ்பூன் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் - சிறிது கறிவேப்பிலை - 6 இலைகள் கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறியதும் இத்துடன் சோயாமாவு,தயிர்,காய்கறிகள் உப்பு,இஞ்சிவிழுது,தேங்காய் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிது எண்ணையில் தாளித்து மாவில் சேர்க்கவும்.மீதமுள்ள எண்ணை மற்றும் சிறிது தண்ணீர் விட்டு மாவை நன்றாக இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். இட்லி தட்டில் சிறிது எண்ணை தடவி மாவை இட்லியாக வார்த்து வேகவைத்து எடுத்து சூடாக சட்னியுடன் பரிமாற சத்தாண மாலை நேர சிற்றுண்டி தயார். இது யாவருக்கும் ஏற்றது.
சோயா கேரட் ஸ்வீட் கட்லட்
தேவையான பொருட்கள்
கேரட்துருவியது - 2 கப் தேங்காய்துருவியது - 1 கப் பொட்டுகடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்பொடி - 1/4 டீஸ்பூன் சர்க்கரை - 1 கப் சோயாமாவு - 1 கப் கடலைமாவு - 1/4 கப் முந்திரித்துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் (வறுத்தது) ரஸ்க் தூள் - 50 கிராம் நெய் - 4 டீஸ்பூன் உப்பு - சிறிதளவு எண்ணை அல்லது நெய் - 50கிராம் செய்முறை :
துருவிய கேரட்,தேங்காய் இவற்றை சிறிது நெய் சேர்த்து கடாயில் குறைந்த தீயில் வைத்து வதக்கவும். பிறகு இத்துடன் சர்க்கரை, முந்திரிதுண்டுகள்,ஏலப்பொடி,பொட்டுகடலை மாவு சேர்த்து நன்கு கிளறி எடுத்து ஆறவிடவும். சோயாமாவையும்,கடலைமாவையும் சிறிது நீர்வ்ட்டு கரைத்துக்கொள்ளவும். மாவு சிறிது கெட்டியானபதத்தில் இருக்கவேண்டும்.கேரட் கலவையை உருண்டைகளாக(எலுமிச்சையளவு) செய்து எடுத்து கரைத்தமாவில் தோய்த்து எடுத்து பிறகு ரஸ்க் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் நான் ஸ்டிக் பேன் அல்லது தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் விரும்பியவடிவில் கட்லட்டை செய்து சுற்றிலும் நெய் அல்லது எண்னை விட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து சூடாக பறிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
|