|
அடிமனதின் அழுத்தத்தை அறவே அகற்றிடும் அமிர்தாஞ்சன்
நெஞ்ச பாரத்தைக் கொஞ்சம் குறைத்திடும் வலி நிவாரணி
பதற்றத்தையும் படபடப்பையும் போக்கிடும் புகை போக்கி
சிந்தனைக் குதிரைகளை சீரிப் பாயச் செய்திடும் ஸ்காட்ச் விஸ்கி
அக்னி வெயிலின் உக்கிரத்தைக் குறைத்திடும் தர்பூசணி
சூறாவளிக் காற்றில் சுழன்றிடும் வாழையைத் தாங்கும் சவுக்கு மரம்
அழுபவனையும் ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் அன்னை மடி
சிரிப்பு !!
நீயும் சிரித்துப்பார் சிறகடித்துப் பறந்துபார்!
|