கல்லூரி நாட்களிலே தொற்றிக்கொண்ட பழக்கமிது.
கல்லூரியை விட்டுவிட்டேன் பழக்கத்தை விடவில்லை.
புத்தாண்டு பிறக்கும் நாளில் விட்டு விட உறுதி கொள்வேன்.
தொடர்ந்திட்டது.... புத்தாண்டும் பழக்கமும் தான்.
பெற்றோர் உடன் பிறந்தோர் உறவினர் பெரியவரென மரியாதைக்கு மறைத்தும் மறைந்தும் தொடர்ந்திட்டது.....
வாரிசாய் எனக்கொருவன் பிறந்திட்டதும் நல்லொழுக்க ஞானோதயம்! விட்டு விட்டேன் புகைப்பழக்கம்!
|