Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பிரபஞ்சத்தின் தோற்றமும், பெருவெடிப்பும் - 3
- சீனு
| | Printable version | URL |

பகுதி - 1 | பகுதி - 2

அவர் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் பார்வையை மாற்றியவர். 1929-ல் அவர் இந்த
 பிரபஞ்சம் விரிவடைகிறது என்று காண்பித்தார்.

பழைய பதிவில் இருந்து உங்கள் பார்வைக்கு:
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹப்பிள் தன் ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன், "nebulae" (லத்தீனில் mist / cloud) என்ற நட்சத்திரக் கூட்டத்தை பற்றிய வாக்குவாதம் நடைப்பெற்றது. அந்த காலகட்டதில் நம் பால் வெளித் தோற்றத்திற்கு (Milky Way Galaxy) வெளியே பிற Galaxy-க்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஹப்பிள் அந்த nebulae-க்கள் நம்முடைய பால் வெளித் தோற்றத்தை சேர்ந்தது இல்லை என்று கண்டுபிடித்தார். எப்படி கண்டுபிடித்தார்? இதற்கு அவர் அந்த காலக்ஸி-க்கள் வெளியிடும் வெளிச்சத்தின் wavelength-ஐ உபயோகித்தார். WaveLength என்பது இரு அலைகளின் தூரம். ஒளி (light) என்பது சீரான மற்றும் தொடர்ச்சியான அலைகளைக் கொண்டது. இந்த இரு பக்கத்து அலைகளுக்கான தூரத்தை wavelength என்பர். இந்த wavelength தான் ஒரு ஒளியின் நிறத்தை தீர்மானிக்கும். Wavelength அதிகமாக அதிகமாக நிறம் சிகப்பாகவும், குறைவாக குறைவாக ஊதா வாகவும் இருக்கும் (இது மனித கண்களுக்கான ஒரு விளக்கம்). நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட wavelength (400 nm - ஊதா to 700 nm -சிகப்பு) உள்ள வெளிச்சம் மட்டுமே தெரியும். மற்றவை கண்ணுக்கு புலப்படாத ரேடியோ அலைகளாகவும் (அதிக wavelength, 10 சென்டிமீட்டர் முதல் சுமார் 100 கிலோ மீட்டர் வரை) , புற ஊதாக்கதிர்களாகவும் (குறைந்த wavelength உதா, X-Ray, Gamma-Ray, 100 நேனோ மீட்டர் முதல் 0.0000001 நேனோ மீட்டர் வரை) கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படும். இந்த wavelength-களை வைத்து இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா என்று கண்டுபிடித்தார். ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது (light) அதிக wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் சிகப்பை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மிடம் இருந்து விலகி செல்கிறது என்று அர்த்தம். அதுவே குறைந்த wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் நீலத்தை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருகிறது என்று அர்த்தம். இவைகளை முறையே Red shift மற்றும் Blue shift என்று கூறுவர். அது என்ன Red Shift மற்றும் Blue shift? இதை அறிந்து கொள்வதற்கு முன், Doppler Effect-ஐ பற்றி தெரிந்து கொள்வோம். சாலையில் செல்லும் பொழுது ஒரு வாகனம் உங்களை (சேற்றை வரி இறைக்காமல்) கடந்து செல்வதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனம் உங்களை நோக்கி வரும்பொழுது அதன் சத்தம் அதிகமாகவும், உங்களை கடந்து செல்லும் பொழுது அதன் சத்தம் குறைவாகவும் இருக்கும். இது எப்படி? அந்த வாகனம் உங்களை நோக்கி வரும் பொழுது அது ஒலி (sound) அலைகளை எல்லா பக்கமும் அனுப்பும். ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள். அந்த ஒலி (sound) உங்களையும் வந்து சேரும். (வந்து சேருவதை உங்களால் உணர முடியவில்லை என்றால் ஒரு நல்ல என்ட் specialist-ஐ, அதாவது ENT specialist-ஐ,பார்க்கவும்). அந்த ஒலி உங்களை நோக்கி வர வர அதன் wavelength சிறுகும். இப்படி சிறுகும் பொழுது அதன் frequency அதிகமாகும். (Frequency - ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பெரும்பாலும் ஒரு நொடியில், ஏற்படும் அலைகளின் எண்ணிக்கை) Frequency அதிகமாக அதிகமாக அதன் சப்தம் (அல்லது சங்கீதம்) அதிகரிக்கும். இதுவே, அந்த ஒலி (sound) உங்களை விட்டு விலகி செல்ல செல்ல அதன் wavelength அதிகமாகும். இப்படி அதிகமாகும் பொழுது அதன் frequency குறையும். Frequency குறைய குறைய அதன் சப்தம் குறையும். (இதை வைத்துத் தான் போக்குவரத்துக் காவலர்கள் நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் வேகத்தை கணக்கிட்டு, வேகமாக சென்றால்கண்டிக்கிறார்கள்). ஆக, இந்த Doppler Effect-ஐ வைத்து Red Shift மற்றும் Blue Shift-ஐ விவரிக்கின்றனர். ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலையாக இருந்தால், அது பொதுவாக பச்சை நிற ஒளி அலைகளை வெளிப்படுத்தும். ஒரு பொருள் உங்களை நோக்கி வந்தால், அதன் wavelength குறைவாக இருக்கும். அதனால் அதன் frequency அதிகமாக இருக்கும். அதன் நிறம் நீல நிறமாக இருக்கும் (400 nm).இது Blue shift. அதுவே, ஒரு பொருள் உங்களை விட்டு விலகி சென்றல், அதன் wavelength நீளமாக (lengthy) இருக்கும். அதனால் அதன் frequency குறைவாக இருக்கும். அதன் நிறம் சிகப்பு நிறமாக இருக்கும் (700 nm). இது RedShift. (அம்மாடியோவ்! ஒரே குழப்பமாக இருக்கிறதா...இது வரை புரியவில்லை என்றால் இன்னொரு முறை படிக்கலாம்...) ஆக...ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Red Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை விட்டு விலகிச் செல்வதாக அர்த்தம். அதுவே, அந்த காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Blue Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருவதாக அர்த்தம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாண்மையான காலக்ஸிக்கள் Red shift-ஆகவே இருக்கிறது. அதனால், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அவரால் இந்த சிகப்பு நிறங்களை (Red shift) வெளிப்படுத்தும் காலக்ஸிக்களின் தூரத்தை அளக்க முடியவில்லை. ஆனால், அவர் கண்டுபிடித்தது, இந்த காலக்ஸிக்கள் எவ்வளவு Red shift வெளிப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு தூரமானதாகும் என்று. அதாவது, தூரம் அதிகரிக்க அதிகரிக்க அது நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகம் அதிகரிகும். அதாவது, This Universe must be Expanding.

இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயம், இந்த அண்டம் விரிவடைகின்றது என்றால், அப்பொழுது ஒரு காலத்தில் இதை விட அளவில் சிறியதாக இருந்திருக்க வேண்டும். அதற்கும் முன் என்று போய்க்கொண்டெ இருந்தால் ஒரு கட்டத்தில் அது ஏதோ ஒரு ஒற்றை பொருளில் இருந்து தான் கிளம்பியிருக்க முடியும். இந்த சிம்பிள் தர்க்கம் தான் 'பெரு வெடிப்பு'. பெரு வெடிப்பு ஏற்பட்டது பூஜ்யம் வினாடி என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பூஜ்யம் வினாடியில் இருந்து அடுத்த ஒரு வினாடியின் 10 ^ -43 வது வினாடி என்பது 'ஃப்ளாங்க் நேரம்'. அதாவது, ஒரு வினாடியில் 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000-ல் ஒரு பங்கு நேரம் தான் இந்த ஃப்ளாங்க் நேரம் என்பது. இந்த அண்டம் உருவான முதல் ஃப்ளாங்க் நேரத்தின், அடுத்த 10 ^ -35 வினாடியில், இந்த அண்டம் ஒரு சங்கிலி வளர்ச்சி (Exponential Growth) உருவானது. வளர்ச்சி என்றால் நினைத்துப் பார்க்க, எழுத முடியாத மிகப் பிரம்மாண்டமான வளார்ச்சி. சங்கிலி வளர்ச்சி என்றால் ஒன்று நூறாகும். அதில் உள்ள ஒவ்வொரு பொருளும் பல நூறாகும். இந்த காலம் தான் காஸ்மிக் இன்ஃப்ளேஷன் (Cosmic Inflation). இது காலம் முடிந்ததும், அண்டமானது மிக அதிக வெப்பத்துடனும், மிக அதிக அடர்த்தியுடனும் இருக்கும். இந்த நிலை வர பூஜ்யம் வினாடியில் இருந்து அடுத்த 20-30 மைக்ரோ வினாடிகள் மட்டுமே ஆகும். இதன் பெயர் QGP என்றழைக்கப்படும் Quark-Gluon Plasma. [படம் "First_Gold_Beam-Beam_Collision_Events_at_RHIC_at_100_100_GeV_c_per_beam_recorded_by_STAR"] Quark மற்றும் Gluon ஆகியவை QGP-ன் உள் இருக்கும் இரண்டு அடிப்படை துகள்கள். அவற்றில் Gluon என்பது அணுவின் உள் இருக்கும் பசை. இந்த பசைதான் ஃபுரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்திருக்க உதவும் பசை. இந்த QGP-ல் இருக்கும் மேட்டர்கள் சொல்ல முடியாதபடி அலைந்துகொண்டிருக்கும். அண்டம் வளர வளர அதன் உஷ்னம் படிப்படியாக குறைந்தது. ஒரு குறிப்பிட்ட உஷ்னத்தில் இந்த Q-க்களும் D-க்களும் இணைந்து இடைநிலை baryons உருவானது. பின் 3,00,000 வருடங்களுக்கு பின் இன்னும் உஷ்னம் குறைந்ததும் உட்கருவும், இலத்திரன்களும் சேர்ந்து உருவானவை தான் இப்பொழுது இருக்கும் அணுக்கள். இதில் முதலில் வந்தவை ஹைட்ரொஜென். பின் வாயுக்கள் நிறைந்த மேகங்களும், நட்சத்திரங்களும், வெளித் தோற்றங்களும் இன்ன பிற வடிவங்களும் உருவாகின. பெருவெடிப்பின் கால அட்டவனை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லவும். பெரு வெடிப்பில் இருந்து கிளம்பியவை கோடானுகோடி நட்சத்திரக் கூட்டங்களான காலக்ஸிக்கள். இந்த காலக்ஸிக்கள் கோடானு கோடி நட்சத்திரக் குடும்பங்களைக் கொண்டிருக்கிறது. அந்த காலக்ஸிக்களில் ஒன்று நம் பால் வெளித் தோற்றம். அந்த தோற்றத்தில் உள்ள கோடானுகோடி சூரியக் குடும்பங்களில் ஒன்று தான் நம் சூரியக்குடும்பம். அந்த சூரியக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் தான் இந்த பூமி. அந்த பூமியில் நாம் எங்கிருக்கிறோம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இன்னொன்றும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த அண்டம் விரிவடைவதால் அது முன் எப்பொழுதோ ஒரே நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றால், இந்த ஒரே நிலைக்கு வருவதற்கு முன் அது விரிவாக இருந்திருக்கலாம். பின் எப்பொழுதோ ஏற்பட்ட Big Crunch'-சினால் அது பின் ஒரே நிலையை அடைந்திருக்கலாம். இப்படியே பின்னோக்கி எண்ணிக் கொண்டே போகலாம். முடிவாக, இந்த 'பெரு வெடிப்பு' கோட்பாடு தான் இறுதியானதா? இல்லை, இது தான் ஆரம்பங்களின் ஆரம்பம். அதன் பின் சில கோட்பாடுகள் வந்துள்ளன. இன்னும் பல கோட்பாடுகள் வரும். ஒன்று மற்றொன்றை ஆமோதிக்கும் அல்லது ஓரங்கட்டும். ஒன்று மட்டும் நிச்சயம், அண்டத்தின் தோற்றத்தை கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒன்றாகவே இருக்கலாம்.

(முற்றும்)

oooOooo
                         
 
Related Posts
சீனு அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |