டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரைவிமர்சனம் : மகா நடிகன்
    - மீனா
    | Printable version |

    ஒரே கல்லில் இரண்டு மங்காய் என்ற ரீதியில் ஒரே படத்தில் சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரையும் தனக்கே உரிய லொல்ளால் விளாசித் தள்ளியிருக்கிறார் சத்யராஜ்.

    குறுக்கு வழியில் போனால் தான் தன் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்ற ஆணித்தரமான கொள்ளையுடைய சத்யராஜ் முதலில் சினிமாவில் துணை நடிகராக சேருகிறார். படப்பிடிப்பில் இயக்குனரிடம் கதாநாயகன் ரமேஷ்கண்ணாவைப் பற்றி ஏடாகுடமாகப் போட்டுக்கொடுத்து, தான் ஹீரோவாகிவிடுகிறார். படம் ஓடாத நிலையில் தன்னை படத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த மும்தாஜ் காதலித்தார் என்றும், தான் அந்தக் காதலை ஏற்காததால் மும்தாஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் செய்தியைப் பரப்புகிறார். விளைவு - படம் ஓட்டமாய் ஓடுகிறது. சத்யராஜ் முன்னணிக் கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்.

    இது இப்படியிருக்க, முத்திரைத் தாள் மோசடியில் சிக்கும் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த இடத்தில் தனது மகனை முதல்வராக்க முயல்கிறார். இதை எதிர்க்கும் பி.வாசு, ராஜ்கபூர் கோஷ்டி புதுக் கட்சித் துவங்குகிறார்கள். கட்சி கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க ஒரு நட்சத்திரம் வேண்டும் என்று நினைக்கும் பி.வாசு, சத்யராஜை தங்கள் கட்சியில் இணையுமாறு வருந்தி அழைக்கிறார். அரசியலில்இறங்குகிறார் சத்யராஜ். எதிர்பார்த்தபடியே பி.வாசு கட்சி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்க முற்படும்போது, நரித்தனமாய் வேலை செய்து வாசு பக்கம் உள்ள ஆட்களைத் தன் பக்கம் இழுத்து தானே முதல்வராகிறார் சத்யராஜ்.

    ஆகா... இவர் முதல்வரா என்று நாம் வியக்கும் போது - ஒரு பிளாஷ்பேக். முதல்வர் பதிவியேற்பு விழாவில் ஒரு திருப்பம். அழகாக படம் முடிகிறது.

    படத்தில் இயக்குனர் ஷக்தி சிதம்பரமும் சத்யராஜும் இணைந்து அசத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் லேட்டஸ்டாக நடந்த அனைத்துச் சம்பவங்களையும் படத்தில் காட்சிகளாக அமைத்திருக்கிறார் இயக்குனர். அதை தனக்கே உரித்தான பாணியில் நடித்துக் கலக்கியிருக்கிறார் சத்யராஜ். நடிகர்கள் அரசியலுக்கு ஏன் வருகிறார்கள் - அல்லது வருவதைப் போல ஏன் அறிக்கை விடுகிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம் அப்ப்பா!!! கேப்டன் ஏன் கொதித்துப் போய் அறிக்கை விட்டார் என்பதற்கான பதில் படத்தைப் பார்க்கும்போது தெளிவாகக் கிடைக்கிறது. நக்கல் நக்கல் - இதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை சத்யராஜின் வசனங்களில்.

    இதே ரேஞ்சில் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் சத்யராஜ். இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் முதல்வராக முயலும் சத்யராஜிடம் ரமேஷ்கண்ணா உலக வரைபடத்தில் இந்தியாவைக் காட்டச் சொல்லும் போது, " என்னோட தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சொல்றியா " என்று அறைவதிலிருந்து " பொடாவில் உள்ளே போன தலைவருக்கு சக்கரை வியாதி. டாக்டர் நடந்தா உடம்புக்கு நல்லதுன்னு சொன்ன உடனே இவரு நடை பயணம் கிளம்பிட்டாரு!!" என்று சத்யாராஜ் கூறுவது ஒரு சாம்பிள். மேலும் பட டைட்டிலை மாற்றச் சொல்லும் தலைவரிடம் " ஏண்டா! உங்க கட்சி பேரு நல்லாயில்லைன்னு நாங்க மாத்த சொன்னா நீங்க மாத்துவிங்களா? " என்று கேட்பதாகட்டும் சினிமா வசனம் பேச முன்வரும் ராஜ்கபூரிடம் "ஏய் ஏய்" என்று சத்யராஜும் ரமேஷ்கண்ணாவும் வசனம் பேச, அதைக் கேட்டு அவர் " யப்பா! இந்த வசனத்தைப் பேச எனக்கு 1 வாரம் டைம் வேணும்!" என்று கேட்பதன் மூலம் யார் யாரையோ நக்கலடிக்கிறார்கள் சத்யராஜும் இயக்குனரும். படம் முழுக்க இதே மாதிரியான வசனங்கள் - நையாண்டிகள். சத்யராஜ் மற்றும் அவரது உதவியாளராக வரும் ரமேஷ்கண்ணா இருவரும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

    படம் முழுக்க சத்யராஜே ஆக்ரமிப்பதால் நாயகிகள் மும்தாஜ் - மற்றும் நமிதா இருவருக்கும் கவர்சி காட்டுவதைத் தவிர வேறு வேலை ஒன்றுமே இல்லை. சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நன்றாகப் பதியும் கேரக்டர் மனோஜ். பாரதிராஜா தன் மகனிடமிருந்து கொண்டு வர முடியாத நடிப்பை எப்படியோ வரவழைத்திருக்கிறார் இயக்குனர். இதே மாதிரி அப்பாவித்தனமான கேரக்டர் மல்லிகா. படத்தில் விசுவும் இருக்கிறார்.  இவர் தான் சத்யராஜைத் திருத்துகிறார். அவ்வளவே!! டி.பி.கஜேந்திரன் மணிவண்ணன் என்று பல இயக்குனர்களும் இக்குனர்களாகவே நடித்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே படத்தின் மூலமாக கோடம்பாக்க ஆட்களையும் கோட்டை ஆட்களையும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் பொதுவில் மக்களுக்குத் தெரிந்தவைதான் என்றாலும் அதைத் துணிச்சலுடன் படமாக எடுத்ததற்காக ஷக்தி சிதம்பரத்திற்கு நமது பாராட்டுக்கள்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |