டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரைவிமர்சனம் : சத்ரபதி
    - மீனா
    | Printable version |

    ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி தன்னுடைய வீரசாதனைக்காக பரம்வீர்சக்ரா விருது வாங்கி தன் சொந்த ஊருக்குத் திரும்பும் சரத் லோக்கல் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தால் தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளைப் பறிகொடுக்கிறார். " எங்களை உன்னால ஒண்ணும் பண்ணமுடியாது.." என்று சவால் விடும் எதிரிகளை அப்போது எதிர்க்கமுடியாமல் திணறும் சரத் பிறகு அவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே சத்ரபதியின் கதைச் சுருக்கம்.

    அநியாயம் செய்பவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். தாங்கள் பிடித்து தண்டிக்க வேண்டிய குற்றவாளிகளுக்கு இப்படி அதிரடியான முறையில் தண்டனைத் தருபவர் யார் என்று காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அமைதியாக ஒரு அனாதை ஆசிரமம் நடத்திக்கொண்டு - கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்யும் சரத் அநீதி நடக்கும் நேரத்தில் அதைச் செய்யும் வில்லன் மகாதேவனின் ஆட்கள் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து கொலை செய்கிறார். இதில் அவருக்குத் துணையாக சில ராணுவ ஆட்கள். இடையில் சரத்தைக் காதலிக்கும் கல்லூரி மாணவியாக நிகிதா. முக்கிய வில்லனான மகாதேவனை சரத் கொல்லுவதற்கு முன்பாக சரத்தை அடையாளம் கண்டுகொள்ளும் காவல் துறை மகாதேவனைக் காப்பாற்ற முயற்சி செய்தாலும் அதையும் மீறி அவரைக் கொல்லுகிறார் சரத். ராணுவத்தின் மிக உயரிய விருதைப் பெற்ற சரத்தை பொது நீதிமன்றம் ஒன்றும் செய்யாமல் ராணுவம் வசம் ஒப்படைக்கிறது. அவ்வளவே!!

    கதை என்னவோ பாதி இந்தியன் - பாதி ரமணா காம்பினேஷனில் இருந்தாலும் ராணுவம் சம்மந்தப்பட்ட காட்சிகளைப் புகுத்தி மற்ற படங்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட இயக்குனர் முயன்றிருக்கிறார். மிடுக்கான ராணுவ அதிகாரியாக வரும் சரத் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார். மற்றபடி நடிப்பெல்லாம் ஓக்கே ரகம் தான்.

    நாயகி நிகிதா வெறும் பொம்மை போல வந்து போவதுடன் சரி. தாராளமயமாக்கல் கொள்ளை உடையவர் என்பது படத்தைப் பார்த்தால் நன்றாகத் தெரிகிறது. அதே போல வில்லனாக வரும் மகாதேவன், வாசு விக்ரம் கோஷ்டியினர் வழக்கமான வில்லத்தனத்தையே இதிலும் ரிபீட் செய்துள்ளார்கள். ஒன்றும் புதிதில்லை!! நேர்மையான ராணுவ அதிகாரியாக வரும் ராஜேஷ் இறுதியில் எதிர்பார்த்தபடியே வில்லன்களுக்கு பலியாகிறார். தேசிய கீதத்தைக் கேட்டதும் நின்ற இடத்திலிருந்து அசையாமல் அவர் சல்யூட் அடிப்பது... பார்க்க நன்றாக இருந்தாலும் கொஞ்சம் மிகைப்படுத்டப்பட்ட காட்சியாகவே தோன்றுகிறது.

    படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நடித்திருப்பவர் வடிவேலு மற்றும் இளவரசு. வடிவேலுவின் நாய்க்கடி சீனும், பாக்ஸிங் சீனும் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவிற்கு அருமையாக உள்ளன. டி.சி யாக வரும் இளவரசு நடக்கும் அநியாயங்களைத் தட்டுக்கேட்க முடியாத நிலையில் உள்ள போலீஸாரின் மனநிலையை அருமையாக நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுதியுள்ளார். அவ்வப்போது அவர் பேசும் ஆன் த ரெக்கார்ட் - ஆப் த ரெக்கார்ட் சூப்பர்!! ரம்பாவின் டப்பாங்குத்து ஸ்டைல் டான்ஸ் ஒக்கே.

    இசை எஸ்.ஏ ராஜ்குமார். ஸ்டண்ட் புதுமுகம் அனல் அரசு. இயக்குனர் ஸ்ரீமகேஷ் கதையைத் தேர்வு செய்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் கதையில் லாஜிக் என்பதே தென்படவில்லை. மேலும் படத்தின் முடிவில் சரத் நிகிதா காதல், சரத்தின் தண்டனை குறித்த விஷயங்களை இயக்குனர் நமது விருப்பத்திற்கே விட்டுவிடுகிறார். ஸ்ரீமகேஷ் - இன்னும் முயற்சி தேவை!!

     

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |