- உங்கள் படைப்புகள் Tscii
1.7 அல்லது யுனிகோடில் இருந்தல் நல்லது. Tscii 1.7 / Unicode ல் தட்டச்சு
செய்ய முரசு , ஈகலப்பை , அழகி ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.
- உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில்
வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும். (ஒரே
நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.)
- தமிழோவியம் பிரதி திங்கள் இரவு நியுயார்க் நேரப்படி வலையேற்றம்
செய்யப்படுகிறது. (இந்திய நேரப்படி செவ்வாய் காலை சுமார் 9 மணிக்கு) ஆகையால்
தங்கள் படைப்புகளை புதன் இரவுக்குள் அனுப்பி விடுவது கால தாமதத்தை தவிர்க்க
உதவும்.
- தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் பிரசுரம்
ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர
நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)
- பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ
தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
- கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும்.
படைப்புகளின் நீளமோ / கருத்தோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.
- உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.
- உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : feedback@tamiloviam.com
உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்...
- தமிழோவியம் ஆசிரியர் குழு
|