Tamiloviam
திரைவிமர்சனம்
 
ஏய்
காதல்
மீசை மாதவன்
திருப்பாச்சி
தேவதையை கண்டேன்
ஐயா
அறிவுமணி
உப்பு
மாயாவி
மண்ணின் மைந்தன்
சந்திரமுகி
மும்பை எக்ஸ்பிரஸ்
சச்சின்
கிரிவலம்
ஜித்தன்
6'2
ஏய்
கனாகண்டேன்
அந்நியன்
அறிந்தும் அறியாமலும்
பதவி படுத்தும் பாடு
இங்கிலீஷ்காரன்
ப்ரியசகி
பிப்ரவரி 14
தாஸ்
பொன்னியின் செல்வன்
செல்வம்
தொட்டி ஜெயா
ஒரு கல்லூரியின் கதை
சாணக்யா
கஜினி
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
மழை
குண்டக்க மண்டக்க
மஜா
 
  முதல் பக்கம்
பெட்டகம்
ஏய்
- மீனா [feedback@tamiloviam.com]

கிட்டத்தட்ட மதுர படத்தில் விஜய்க்கு பசுபதி திவசம் செய்வதைப் போலவே தனக்குத் தானே திவசம் செய்துகொள்கிறார் கோட்டா சீனிவாசராவ். இதுதான் படத்தின் முதல் காட்சியே!! பழனியில் அன்பான தங்கையுடன் அமைதியாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர் சரத். எந்த வம்பிற்கும் போகாத டைப். போஸ்ட் ஆபீசில் வேலை செய்யும் நமிதாவைக் கண்டதும் காதல் கொள்கிறார் சரத். அம்மணியும் உடனே ஓக்கே சொல்லிவிட அருமையாக செல்கிறது இவர்கள் காதல் கதை.

இந்நிலையில் லோக்கல் தாதா ஒருவனால் சரத்தின் தங்கை மிரட்டப்படுகிறார். அதனால் கோபமடையும் சரத் அவனை துவம்சம் செய்கிறார். இதே தாதாவால் ஒரு வன் சரத் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்ட வழக்கில் முதலில் சாட்சி சொல்ல மறுத்தவர் தான் சரத். இந்த விஷயத்தைக் குத்திக்காட்டி " தனக்கென்று வந்தால் தான் நீ எதையும் செய்கிறாய் - ஊரார் எப்படிப்போனால் உனக்கென்ன?" என்று சரத்தைக் குறை கூறுகிறார் நமிதா. நமிதா கூறுவதைக் கேட்டு ஆத்திரமடையும் சரத்தின் தங்கை, தனது பிளாஷ் பேக்கைச் சொல்லத் துவங்குகிறார்.

ராணுவ வீரரான சரத் விருமுறையை நண்பன் கலாபவன் மணியுடன் கழிக்க சென்னை வருகிறார். சென்னையில் இறங்கியவுடனேயே அடாவடிப் போலீஸான ஆஷிஷ் வித்யார்த்தியின் கொடுமைக்கு ஆளாகும் பெண் ஒருவரைக் காப்பாற்ற முயல்கிறார். அதனால் ஆத்திரமடையும் ஆஷிஷ் வித்யார்த்தி பொய் கேஸ் போட்டு சரத்தை உள்ளே தள்ளி ஏக டார்ச்சர் செய்கிறார். ஒரு வழியாக வெளியே வரும் சரத் இது குறித்து போலீஸ் உயரதிகாரியான விஜயகுமாரிடம் குமுறுகிறார். அப்போது விஜய்குமார் பொறுக்கி போலீஸ் அதிகாரிகளைப் பற்றியும் அவர்களைத் தன் போன்ற நேர்மையான அதிகாரிகளால் ஒன்றும் செய்யமுடியாத நிலை குற்த்தும் கூறுகிறார். இதைக் கேட்டு பொங்கியெழும் சரத் - தவறு செய்பவர்களைத் தானே தன் நண்பனுடன் சேர்ந்து தண்டிக்க ஆரம்பிக்கிறார்.

உள்ளூரில் பெரிய மனிதரான கோட்டா சீனிவாசராவ் சரத்தின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். அதற்கு பழிவாங்கும் விதமாக சரத்தைக் கொலை செய்ய முயற்சி செய்யும் போது நண்பனைக் காப்பாற்ற கலாபவன் மணி தன் உயிரை இழக்கிறார். இதில் தொடர்ந்து நடக்கும் மோதலில் கோட்டா சீனிவாசராவின் கை - காலைச் செயலிழக்கச் செய்துவிடுகிறார் சரத். கலாபவன் மணியின் தங்கையை தன் சொந்த தங்கையாக நினைத்து அவரைக் கலெக்டர் ஆக்கவேண்டும் என்ற கனவுடன் பழனிக்கு குடியேறுகிறார் சரத். இதுவே பிளாஷ்பேக். சரத்தால் பாதிக்கப்பட்ட வில்லன்களான கோட்டா சீனிவாசராவ், ஆஷிஷ் வித்யார்த்தி, மற்றும் லோக்கல் தாதா வின்சென்ட் அசோகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சரத்தைப் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள். இதிலிருந்து சரத் எப்படித் தப்பித்து அவர்களைப் பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.

சத்ரபதி படத்தை கொஞ்சம் வேறு செட்டில் வேறு ஆட்களுடன் எடுத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் படம் பார்க்கும் போது நிச்சயம் நம் மனதில் தோன்றும். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை. சத்ரபதி போலவே சரத் இதிலும் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார், செண்டிமெண்ட் காட்சிகளில் உருகுகிறார்.. அவ்வளவே!!

நமிதா - கவர்ச்சி காட்டுவதன் மூலமாக நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தமிழ் சினிமாக்களில் இடம் பிடிப்பார். மற்றபடி நடிப்பெல்லாம்.. மூச்!! படத்தில் ஒரே ஆறுதல் வடிவேலு மற்றும் கலாபவன் மணி இருவரும் தான். கிரேன் மனோகர் வடிவேலுவிடம் செய்யும் நக்கல் இன்னொரு பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனை உருவாக்கும். கொஞ்ச நேரமே வந்தாலும் கலாபவன் மணியும் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வில்லன்கள் மூவர் இருந்தாலும் வில்லத்தனத்தில் ஒன்றும் புதிதில்லை. ஒரே ஒரு பாடலுக்கு ஆடிவிட்டுப் போகிறார் மும்தாஜ். இசை ஸ்ரீகாந்த் தேவா - சுமார் ரகம். படத்தில் ஏகப்பட்ட ஒளிப்பதிவாளர்கள்... இயக்குனர் வெங்கடேஷ் அடுத்த படத்திலாவது ஒரு உருப்படியான கதையை படமாக்க முயற்சி செய்யவேண்டும்!! அதேபோல சரத் இனி படத்திற்கு கதை கேட்கும் போது தான் முன்பு நடித்த படங்களின் கதையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |