தமிழோவியம்
துணுக்கு : கேப்டனின் 150வது படம்
- ஆனந்த் சங்கரன்

கேப்டனின் 150வது படம்

விஜயகாந்த்தின் சமீபத்திய படம் 'சபரி' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்ஹ்டு ஏமாற்றிவிட்டது. ஆகையால் தன்னுடைய அடுத்த படத்தில் அதிக கவனமுடன் இருக்கிறார் கேப்டன். அடுத்த படம் அவரின் 150 வது படம். தன்னுடைய 100 வது படமான 'கேப்டன் பிரபாகரன்' போல ஒரு ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.

அதுவும் சரிபடவில்லயென்றால் சினிமாவுக்கு ஒரு முழுக்க போட்டு முழு நேர அரசியல்வாதியாக ஈடுபடபோகிறார் கேப்டன் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

'அது ஒரு கனாக்காலம் கேப்டன்'


அம்மாவாக பானுப்பிரியா

தனுஷ் நடிக்கும் 'பொல்லாதவன்' படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை நிஜ குடிசைப் பகுதிகளில் BanuPriyaபடமாக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் தனுஷின் அம்மாவாக பானுப்பிரியா நடிக்கிறார்.

'முதலில் அர்ச்சனா இப்போது பானுப்பிரியா. அம்மாக்கள் அழகுதான்.. மகன் ?'

மற்றொரு ரஜினி படம்

சூப்பர் ஸ்டாரின் 'பில்லா' புதிய பில்லாவாக ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அஜித் நடிக்கிறார். அதே போல் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'ஜானி'யும் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் எஸ்.ஜானகி பாடிய பாடல்களை புதிய ரீமிக்ஸில் ஸ்ரேயா கோஷல் பாடயிருக்கிறார்.

'இந்த ரேட்டுல போனா சிவாஜி படமே ரீமேக் ஆயிடும் போல இருக்கே'

லீடர்

இலங்கை மக்கள் சார்ந்த, கதை 'லீடர்' என்ற பெயரில் உருவாகிவருகிறது. நாயகனாக ரமணா நிரஞ்சன் நடிக்கிறார். இதில் வில்லன் பாபு ஆண்டனி போடும் ஒரு சண்டைக்காட்சி மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துக் காட்சிகளும் இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன.

'இலங்கையில ஏற்கனவே சண்டை நடக்கறதுனாலயா சார் ?'

இயக்குனர் கனவு

Ranjithaபாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்' படத்தோடு நடிப்பதை தவிர்க்கப் போகிராராம் ரஞ்சிதா. இவருடைய அடுத்த இலக்க்கு பாலிவுட்டில் படம் இயக்குவதுதானாம். இதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

'வாழ்த்துக்கள் ரஞ்சிதா.'

Copyright © 2005 Tamiloviam.com - Authors